மைசூருவில் மகாராஜா டிராபி

பெங்களூரு: மகாராஜா டிராபி தொடருக்கான போட்டிகள் பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு மாற்றப்பட்டன.
கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் (கே.எஸ்.சி.ஏ.,) சார்பில், மகாராஜா டிராபி 'டி-20' தொடர் (ஆக. 11-28) பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில் நடக்க இருந்தது. கடந்த ஜூன் 4ல், இங்கு நடந்த பெங்களூரு அணியின் பிரிமியர் லீக் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கிய 11 ரசிகர்கள் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, நீதிபதி மைக்கேல் டிகுன்ஹா தலைமையிலான ஆணையம், இங்கு போட்டிகளை நடத்திட தடை விதித்தது.
இப்போட்டிகளை ஆலுரில் நடத்த கே.எஸ்.சி.ஏ., முடிவு செய்தது. ஆனால் இங்கு, ராட்சத மின்விளக்கு வசதி இல்லாததால் இம்முடிவை கைவிட்டது. இந்நிலையில் மைசூருவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.
இதனால் துலீப் டிராபி, பெண்கள் உலக கோப்பை (50 ஓவர்) தொடருக்கான போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.