பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் வரவேற்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்திற்கு அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' சுற்று பயணம் செய்ய வந்தார். அவரை கட்சியினர் வரவேற்றனர்.

விருதுநகர் மேற்கு மாவட்ட அவை தலைவர் விஜயகுமரன், நகரச் செயலாளர் வெங்கடேஷ், நகர மகளிரணி செய லாளர் தனலட்சுமி, வார்டு கிளைச் செயாலாளர்கள் சக்திவேல், குருவு, வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் முத்துப் பாண்டியன், பொருளாளர் ஸ்ரீதரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் சீனிவாசன், ஒன்றியச்செயலாளர் மச்சராஜா வரவேற்றனர்.

அருப்புக்கோட்டையில் அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் யோக வாசுதேவன், நகர செயலாளர் சோலை சேதுபதி, அ.தி.மு.க., பிரமுகர் சித்ரா ஜெய்சங்கர், நகர இலக்கிய அணி செயலாளர் சீனி வாசகன்,நகர மகளிர் அணி செயலாளர் பிரேமா தலைமையில், 500 மகளிர் அணியினர் கும்ப மரியாதை யுடன் வரவேற்றனர்.

சாத்துாரில் மாநில ஜெ., பேரவை துணைச் செயலாளர் சேதுராமானுஜம், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், எஸ்.ஜி. சுப்பிரமணியன், வி.ஜி.மணிமேகலை, மாவட்ட கவுன்சிலர் இந்திரா கண்ணன்,முன்னாள் நகரச் செயலாளர் எம்.எஸ். கே. இளங்கோவன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் எஸ்.கே. சுப்பிரமணி, முன்னாள் மாவட்ட துணைச் செய லாளர் கே.வி.பூபாலன், முன்னாள் அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் கே.கருப்பசாமி யாதவ், ஆவின் எஸ். அசோக் உட்பட கட்சி யினர் வரவேற்றனர்.

Advertisement