ராஜபாளையத்தில் மழை உழவுப் பணிகளில் ஆயத்தம்

ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்றுப் பகுதியில் நீண்ட நாட்களுக்குப் பின் பெய்த லேசான மழையால் ஆடிப்பருவ உழவு பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

ராஜபாளையத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கடும் வெயிலும் ஆடி காற்றினால் வறண்ட சூழலையும் காணப்பட்டு வந்தது. கடந்த நான்கு நாட்களுக்கு முன் மழை அறிவிப்பை முன்னிட்டு உழவு பணிகளுக்காக விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அறிவிப்புக்கு மாறாக லேசான சாரலும் வெயிலும் மாறி மாறி அடித்து வந்ததால் வயல்வெளிகள் காய்ந்திருந்தன. அதற்கு ஏற்ப கண் நோய்களும் வறண்டு காணப்பட்டது.

ஆவணி பட்டத்திற்காக ஆடி பருவ கடைசியில் விவசாய பணிகளை துவங்க வயல்வெளிகளை தயார்படுத்த காத்து இருந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை 4:00 மணிக்கு மேல் 20 நிமிடம் பர வலாக மழை பெய்தது. ஏற்கனவே மக்காச்சோளம் சாகுபடிக்காக விவசாயிகளும் உழவு பணிகளை தொடங்கி உள்ளனர்.

Advertisement