அமெரிக்க வரி விதிப்பின் பின்னணியில் பாக்., ராணுவம்: கார்த்தி சிதம்பரம் சந்தேகம்

புதுடில்லி: ''இந்தியாவுக்கு அமெரிக்கா அநியாய வரி விதிப்பு செய்ததன் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் இருக்கலாம்,'' என்று எம்பி., கார்த்தி சிதம்பரம் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளதாவது;
இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி, நாம் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதால் மட்டுமே விதிக்கப்படவில்லை. ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் கூட ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்கின்றன. இதையும் தாண்டிய கொடூரமான காரணம் இருக்கிறது.
பாகிஸ்தான் ராணுவம், அதன் வணிக நிறுவனங்கள் மூலம் டிரம்ப் நிர்வாகத்தினருடன் மிக வலுவான வணிக உறவுகளை கொண்டு இருக்கலாம் என்று நான் நம்புகிறேன். முன் எப்போதும் இல்லாத வகையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி முனிர், அமெரிக்காவுக்கு 2வது முறையாக செல்கிறார். நிச்சயம் அவர் (முனிர்) இந்தியாவின் நண்பராக செயல்படப்போவதில்லை.
இப்போதைக்கு அமெரிக்காவுக்கும் நமக்கும் நட்பு எதுவும் கிடையாது. பின்வழியில் பேச்சு வார்த்தை எதுவும் கிடையாது. ஆனால் நாம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
அமெரிக்காவுக்கு நாம் தேவை. நமக்கு அமெரிக்கா தேவை. வாடிக்கையாளர்களை உடனடியாக ஏற்படுத்திக்கொள்வது எளிதானதல்ல; அதேபோல, அமெரிக்காவுக்கும் பொருட்களை சப்ளை செய்வோரை கண்டறிவதும் எளிதானதல்ல.
இவ்வாறு கார்த்தி கூறினார்.









மேலும்
-
கேரளாவில் நீரில் மூழ்கி கோவை கல்லூரி மாணவன் பலி; ஒருவர் மாயம்; சுற்றுலா சென்ற போது சோகம்
-
20 சதவீத பண்டிகை கால சலுகை பயண திட்டம் : அறிமுகம் செய்கிறது இந்திய ரயில்வே
-
டிரம்புக்கு எதிராக மோடி அரசை ஆதரிக்க வேண்டும்: சரத்பவார்
-
தோல்வி பயம் காரணமாக தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு: சொல்கிறார் வாசன்
-
குழந்தைகளுடன் ரக்ஷா பந்தனை கொண்டாடிய பிரதமர் மோடி
-
எம்ஜிஆர், ஜெயலலிதாவை ஒரு ஜாதிக்குள் சுருக்க முடியாது; திருமாவளவன்