கேரளாவில் நீரில் மூழ்கி கோவை கல்லூரி மாணவர்கள் இருவர் பலி; சுற்றுலா சென்ற போது சோகம்

பாலக்காடு: கேரளாவின் சித்தூர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த கோவை கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வரும் மாணவர்கள் 10 பேர், கேரள மாநிலம் பாலக்காடுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சித்தூரில் உள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, அங்கிருந்த துளை வழியாக அருண்குமார் மற்றும் ஸ்ரீகவுதம் ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
உடனடியாக தீயணைப்பு மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் மற்றும் மீட்பு படையினரின் உதவியுடன் ஸ்ரீகவுதம் மீட்கப்பட்டு, அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், மாயமான அருண்குமாரை மீட்பு குழுவினர் மற்றும் ஸ்கூபா வீரர்கள் தேடி வந்தனர். தற்போது, அவரது உடலும் மீட்கப்பட்டுள்ளது.
மேலும்
-
ஆசிய சர்பிங் போட்டியில் அசத்தும் வீராங்கனைகள்...
-
மும்பையில் நெட்வொர்க் பிரச்னை : ஏர் இந்தியா விமான விமான சேவை பாதிப்பு
-
சின்சினாட்டி டென்னிஸ்: கார்சியா வெற்றி
-
ஆக., 15ல் புடினை சந்திக்கிறார் டிரம்ப்; உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுக்காது என்கிறார் ஜெலென்ஸ்கி
-
காஷ்மீருக்கு முதல் முறையாக சரக்கு ரயில் சேவை ; பிரதமர் பெருமிதம்
-
தேர்தல் வெற்றிக்காக தரப்படும் இலவசங்கள்: யோசித்து செயல்பட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுரை