ஆப்பரேஷன் சிந்துார்: பாக்., ராணுவத்தின் 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது இந்திய விமானப்படை!

பெங்களூரு: ஆப்பரேஷன் சிந்துார் நடந்தபோது, பாகிஸ்தானுக்கு சொந்தமான 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என்று, இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம், 'ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் நீண்ட காலமாக செயல்பட்ட 6 பயங்கரவாத முகாம்கள் உருத்தெரியாமல் அழிக்கப்பட்டன.
இந்திய விமானப்படை தாக்குதலில், எத்தனை பாகிஸ்தான் விமானங்கள் அழிக்கப்பட்டன என்ற விவரத்தை இன்று விமானப்படை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான 6 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இவற்றில் 5 போர் விமானங்கள் என்றும், மற்றொன்று மிகப்பெரிய அளவிலான ராணுவ விமானம் என்றும், விமானப்படை தலைமை தளபதி அமர்ப்ரீத் சிங் இன்று அறிவித்தார்.
பெங்களூருவில் நடந்த விமானப்படை அதிகாரிகளுக்கான கருத்தரங்கில், அமர்ப்ரீத் சிங் இந்த தகவலை தெரிவித்தார். விமான நிலையத்தில் ஹேங்கரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எப் 16 ரக போர் விமானங்களும் விமானப்படை தாக்குதலில் சுக்கு நுாறாக நொறுங்கின. மிகக்சிறப்பாக திட்டமிடப்பட்டு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.












மேலும்
-
கேரளாவில் நீரில் மூழ்கி கோவை கல்லூரி மாணவன் பலி; ஒருவர் மாயம்; சுற்றுலா சென்ற போது சோகம்
-
20 சதவீத பண்டிகை கால சலுகை பயண திட்டம் : அறிமுகம் செய்கிறது இந்திய ரயில்வே
-
டிரம்புக்கு எதிராக மோடி அரசை ஆதரிக்க வேண்டும்: சரத்பவார்
-
தோல்வி பயம் காரணமாக தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு: சொல்கிறார் வாசன்
-
குழந்தைகளுடன் ரக்ஷா பந்தனை கொண்டாடிய பிரதமர் மோடி
-
எம்ஜிஆர், ஜெயலலிதாவை ஒரு ஜாதிக்குள் சுருக்க முடியாது; திருமாவளவன்