சிவகாசி அருகே வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிப்பு: வெடிவிபத்தில் 3 பேர் பலி

சிவகாசி; சிவகாசி அருகே பட்டாசுகள் வெடித்து ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
சிவகாசியை அடுத்துள்ள விஜயகரிசல் குளத்தில் உள்ள ஒரு வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. வழக்கம் போல இங்கு பலர் பட்டாசுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியது. பலத்த சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்துச் சிதறவே, அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் உடல்சிதறி பலியாகினர். ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.
தீபாவளி நெருங்கிவரும் தருணத்தில் இதுபோன்று அனுமதியின்றி வீடுகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அரசு அதிகாரிகள் உடனடியாக ஆய்வு நடத்தி சட்ட விரோத பட்டாசு தயாரிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.




மேலும்
-
கேரளாவில் நீரில் மூழ்கி கோவை கல்லூரி மாணவன் பலி; ஒருவர் மாயம்; சுற்றுலா சென்ற போது சோகம்
-
20 சதவீத பண்டிகை கால சலுகை பயண திட்டம் : அறிமுகம் செய்கிறது இந்திய ரயில்வே
-
டிரம்புக்கு எதிராக மோடி அரசை ஆதரிக்க வேண்டும்: சரத்பவார்
-
தோல்வி பயம் காரணமாக தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு: சொல்கிறார் வாசன்
-
குழந்தைகளுடன் ரக்ஷா பந்தனை கொண்டாடிய பிரதமர் மோடி
-
எம்ஜிஆர், ஜெயலலிதாவை ஒரு ஜாதிக்குள் சுருக்க முடியாது; திருமாவளவன்