மும்பையில் நெட்வொர்க் பிரச்னை : ஏர் இந்தியா விமான விமான சேவை பாதிப்பு

1

மும்பை: மும்பை விமான நிலையத்தில் ஏற்பட்ட நெட்வொர்க் பிரச்னை காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: நெட்வொர்க் பிரச்னையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக , செக் இன் அமைப்புகளில் இடையூறு ஏற்படுத்தி உள்ளது. இதனால், விமானம் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது அமைப்புகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. நிலைமை படிப்படியாக சரியாகி வருவதால், சில விமான சேவைகள் பாதிக்கப்படக்கூடும். பயணிகள்தங்களது விமான சேவை குறித்துமுன்கூட்டியே தெரிந்துகொள்ளுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டில்லியில் பாதிப்பு



டில்லியில் பெய்த கனமழை காரணமாக டில்லியில் 300 விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை தாமதமாகியது. அங்கு பெய்த கனமழை காரணமாக , விமானங்களை வேறு நகரங்களுக்கு திருப்பி விட முடியவில்லை.

Advertisement