சென்னை செஸ்: அர்ஜுன் இரண்டாவது வெற்றி

சென்னை: சென்னையில் 'கிராண்ட் மாஸ்டர்ஸ்' செஸ் தொடர் நடக்கிறது. மாஸ்டர்ஸ் பிரிவில் 10 பேர் பங்கேற்கின்றனர். நேற்று 3வது சுற்று நடந்தது. இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, அமெரிக்காவின் ரே ராப்சனை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், 46 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இது இவரது 2வது வெற்றி.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் விதித் குஜ்ராத்தி, சக வீரர் நிஹால் சரினை வீழ்த்தினார். இந்தியாவின் கார்த்திகேயன் முரளி, ஜெர்மனியின் வின்சென்ட்டிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் பிரனவ், அனிஷ் கிரி மோதிய போட்டி 'டிரா' ஆனது. மூன்று சுற்று முடிவில் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற வின்சென்ட் (3.0) முதலிடத்தில் உள்ளார். அர்ஜுன் (2.5), ராப்சன் (1.5) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.
வைஷாலி தோல்வி
சாலஞ்சர்ஸ் பிரிவில் வைஷாலி, ஹரிகா என இரு வீராங்கனைகள், 8 வீரர்கள் என 10 இந்திய நட்சத்திரங்கள் விளையாடுகின்றனர். நேற்று நடந்த மூன்றாவது சுற்றில் வைஷாலி, லியான் மெடோன்காவை எதிர்கொண்டார். இதில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய வைஷாலி, 62வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.
மற்ற போட்டிகளில் பிரனேஷ், அபிமன்யு வெற்றி பெற்றனர். ஹரிகா-அதிபன் பாஸ்கரன், திப்தயன்-ஆர்யன் மோதிய போட்டிகள் 'டிரா' ஆகின. மூன்று சுற்று முடிவில் பிரனேஷ், அபிமன்யு தலா 2.5 புள்ளியுடன் 'டாப்-2' இடத்தில் உள்ளனர்.
மேலும்
-
தமிழக, கேரள வனப்பகுதியில் 2668 வரையாடுகள்
-
இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் டிரம்பின் முன்னாள் ஆலோசகர் வெளிப்படை
-
அ.தி.மு.க., பேனர் சரிந்து விழுந்து இருவர் காயம்
-
பாக்., ராணுவம் தாக்குதலில் 47 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
-
கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 80 பேர் பலி
-
ரஷ்ய துணை பிரதமருடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு