அசத்துவரா அனிமேஷ், அன்னு ராணி * உலக கான்டினென்டல் தடகளத்தில்...

புவனேஸ்வர்: ஜப்பானின் டோக்கியோவில் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் செப். 13-21ல் நடக்க உள்ளது. இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), குல்வீர் சிங் (5000 மீ., ஓட்டம்), பிரவீன் சித்ரவேல் ('டிரிபிள் ஜம்ப்'), பாருல் சவுத்தரி (3000 மீ., பெண்கள் ஸ்டீபிள் சேஸ்) என 4 நான்கு பேர் மட்டும், இதில் பங்கேற்க தகுதி பெற்றனர். அவினாஷ் சபிள் (ஸ்டீபிள் சேஸ்) சமீபத்தில் ஏற்பட்ட காயத்தால் விலகினார்.
முதன் முறை
இதனிடையே இந்தியாவின் முதன் முறையாக உலக தடகள கான்டினென்டல் டூர் இன்று, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடக்கிறது. இதில் பங்கேற்று சாதிக்கும் நட்சத்திரங்கள் உலக தடகளத்தில் பங்கேற்க தகுதி பெறலாம். தவிர, இதில் கிடைக்கும் புள்ளிகள் உலக தடகளத்திற்கு செல்ல கைகொடுக்கும்.
இன்று நடக்கும் போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி (ஈட்டி எறிதல்), அனிமேஷ் குஜுர் (200 மீ.,), அப்துல்லா அபூபக்கர் ('டிரிபிள் ஜம்ப்'), முரளி ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்), யாஷ்விர் சிங் (ஈட்டி எறிதல்) உள்ளிட்டோர் திறமை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்.
200 மீ., ஓட்டத்தில் அனிமேஷ் 23.32 வினாடியில் பந்தய துாரத்தை கடக்கிறார். இன்று 20.16 வினாடியில் வந்தால் உலக தடகளத்துக்கு செல்லலாம். மாறாக அதிக புள்ளி பெறும் பட்சத்தில், தரவரிசை அடிப்படையில் தகுதி பெறலாம்.
அன்னு ராணி சமீபத்தில் 62.59 மீ., துாரம் ஈட்டி எறிந்தார். ஆனால் உலக தடகளத்துக்கு தகுதிபெற 64 மீ., துரம் எறிய வேண்டும். 36 இடம் மீதமுள்ள நிலையில் அன்னு, அதிக புள்ளிகள் எடுக்க முயற்சிக்கலாம்.
காயத்தில் இருந்த மீண்ட முரளி ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்), 8.27 மீ., துாரம் தாண்ட வேண்டும். இந்த துாரத்தை முன்னதாக 6 முறை எட்டியுள்ளார். இது தொடர்ந்தால் நேரடியாக உலக தடகளத்தில் பங்கேற்கலாம்.
மேலும்
-
தமிழக, கேரள வனப்பகுதியில் 2668 வரையாடுகள்
-
இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் டிரம்பின் முன்னாள் ஆலோசகர் வெளிப்படை
-
அ.தி.மு.க., பேனர் சரிந்து விழுந்து இருவர் காயம்
-
பாக்., ராணுவம் தாக்குதலில் 47 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
-
கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 80 பேர் பலி
-
ரஷ்ய துணை பிரதமருடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு