ஆசிய சர்பிங் போட்டியில் அசத்தும் வீராங்கனைகள்...

சென்னையில் நடக்கும் ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி போட்டிக்கு முதல் முறையாக இந்தியாவின் ரமேஷ் தகுதி பெற்று அசத்தியுள்ளார்.
ஆசிய சர்பிங் கூட்டமைப்பு சார்பில், இந்தியா , தமிழ்நாடு சர்பிங் சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்தும் நான்காவது ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் - 2025 போட்டி சென்னை மாமல்லபுரம் கடல்கரையில் நடந்து வருகிறது.
இதன் ஆடவருக்கான ஓப்பன் அரையிறுதி போட்டி நேற்று நடந்தது. இதன் முதல் ஹீட்டில் இந்தியாவின் ரமேஷ் புதிஹல், கிஷோர் குமார் உட்பட 4 பேர் போட்டியிட்டன. போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தோனேசியாவின் பாஜர் ஆரியானா 13.83 புள்ளியும், இந்தியாவின் ரமேஷ் புதிஹல் 11.43 புள்ளிகள் பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். துரதிர்ஷ்டவசமாக இந்தியா சார்பில் போட்டியிட்ட தமிழகத்தின் கிஷோர் நான்காவது இடம் பெற்று வெளியேறினார்.
இரண்டாவது ஹீட்டில் கோரியா நாட்டின் கனோவா ஹீஜே 15.33 புள்ளியும், இந்தோனேசியாவின் மேகா அர்தனா 12.47 புள்ளிகள் பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
மகளிர் ஓப்பன் அரையிறுதி போட்டியின் முதல் ஹீட்டில் சீனாவின் ஷுஹான் ஜின் 14.50 புள்ளியும், ஜப்பானின் சுமோமோ சாடோ 12.00 புள்ளிகள் பெற்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
அடுத்து நடந்த ஹீட்டில் ஜப்பானின் அன்ரி மாட்சுனோ 16.33 புள்ளியும், இஷபெல் ஹிக்ஸ் 10.73 புள்ளிகளுடன் இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றனர். இறுதி போட்டி இன்று நடக்க உள்ளது.
மேலும்
-
சென்னை செஸ்: அர்ஜுன் இரண்டாவது வெற்றி
-
அசத்துவரா அனிமேஷ், அன்னு ராணி * உலக கான்டினென்டல் தடகளத்தில்...
-
இந்தியாவுக்கு வான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு ரூ.127 கோடி நஷ்டம்
-
போக்குவரத்து ஓய்வூதியர் நல சங்க கூட்டம்
-
சுப்மன் கில் 'ஜெர்சி' ரூ.5.41 லட்சம்
-
பும்ராவுக்கு சலுகை அளிப்பது சரியா: கிரிக்கெட் பிரபலங்கள் எதிர்ப்பு