அலைச்சறுக்கு: ரமேஷ் சாதனை

சென்னை: ஆசிய சர்பிங் (அலைச்சறுக்கு) சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை அருகே உள்ள மாமல்லபுரம் கடற்கரையில் நடக்கிறது. ஓபன் பிரிவில் 47 பேர் பங்கேற்கின்றனர். நேற்று அரையிறுதி போட்டிகள் நடந்தன. ஆண்களுக்கான 'ஹீட் 1'ல் இந்தியாவின் ரமேஷ் புதிஹல், கிஷோர் குமார் உட்பட 4 பேர் பங்கேற்றனர்.
'டாப்-2' இடம் பெற்றால் பைனல் என்ற நிலையில் இந்தோனேஷிய வீரர் அரியானா (13.83) முதலிடம் பெற்றார். இந்தியாவின் ரமேஷ், 3, 4வது ரைடில் சிறப்பாக செயல்பட்டார். 11.43 புள்ளியுடன் இரண்டாவது இடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினர். இதையடுத்து ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என சாதனை படைத்தார். சீனாவின் ஷிடாங் (9.03), கிஷோர் குமார் (8.10) 3, 4வது இடம் பிடித்து வெளியேறினார்.
பெண்களுக்கான ஓபன் பிரிவில் 33 பேர் பங்கேற்கின்றனர். 'ஹீட் 1' பிரிவில் சுஹான் (சீனா), இசபெல் (தாய்லாந்து), மட்சுனோ, சுமோமோ (ஜப்பான்) பைனலுக்கு முன்னேறினர். 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான காலிறுதியில் இந்தியாவின் ஆத்யா சிங், மூன்றாவது இடம் பெற்று வெளியேறினார்.
மேலும்
-
சென்னை செஸ்: அர்ஜுன் இரண்டாவது வெற்றி
-
அசத்துவரா அனிமேஷ், அன்னு ராணி * உலக கான்டினென்டல் தடகளத்தில்...
-
இந்தியாவுக்கு வான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு ரூ.127 கோடி நஷ்டம்
-
போக்குவரத்து ஓய்வூதியர் நல சங்க கூட்டம்
-
சுப்மன் கில் 'ஜெர்சி' ரூ.5.41 லட்சம்
-
பும்ராவுக்கு சலுகை அளிப்பது சரியா: கிரிக்கெட் பிரபலங்கள் எதிர்ப்பு