உலக விளையாட்டு செய்திகள்

அமெரிக்கா 'ஹாட்ரிக்'
இந்தோனேஷியாவில் நடக்கும் பெண்கள் (21 வயது) உலக வாலிபால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் அமெரிக்க அணி 3-0 என மெக்சிகோவை வீழ்த்தியது. ஏற்கனவே தென் கொரியா, டொமினிகன் அணிகளை வீழத்திய அமெரிக்கா 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.


ஆஸ்திரியா அசத்தல்
எகிப்தில் நடக்கும் ஆண்கள் (19 வயது) உலக ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் ஆஸ்திரியா, குவைத் அணிகள் மோதின. ஆஸ்திரியா 32-26 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. சவுதி அரேபிய அணி 48-25 என கினியாவை வீழ்த்தியது.


செர்பியா அபாரம்
ஜார்ஜியாவில் நடக்கும் 'யூரோ' கூடைப்பந்து (16 வயது) லீக் போட்டியில் ஜெர்மனி, செர்பியா அணிகள் மோதின. இதில் செர்பிய அணி 86-60 என வெற்றி பெற்றது. ஸ்பெயின் அணி 98-73 என்ற கணக்கில் ஜார்ஜியாவை வீழ்த்தியது.


பெல்ஜியம் ஜெயம்
ஜெர்மனியில் நடக்கும் 'யூரோ' ஹாக்கி சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் பெல்ஜியம், ஆஸ்திரியா அணிகள் மோதின. இதில் பெல்ஜியம் அணி 10-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி 5-0 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தியது.


எக்ஸ்டிராஸ்

* அசாமில் நடந்த துாரந்த் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் போடோலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தி, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது.

* ஆந்திராவின் காக்கிநாடாவில் நடக்கும் ஜூனியர் பெண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் காலிறுதியில் ஹரியானா அணி 4-1 என ஒடிசாவை வென்றது. மற்ற காலிறுதியில் சட்டீஸ்கர் (2-1, எதிர்: ம.பி.,), ஜார்க்கண்ட் (3-1, பஞ்சாப்), உ.பி., (2-1, மகாராஷ்டிரா) வெற்றி பெற்றன.


* ஆஸ்திரேலியாவின் மக்காய் நகரில் நடந்த 2வது 'டி-20' போட்டியில் இந்தியா 'ஏ' பெண்கள் அணி (73/10, 15.1 ஓவர்) 114 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா 'ஏ' அணியிடம் (187/4, 20 ஓவர்) தோல்வியடைந்தது.


* இந்தோனேஷியாவில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் அரையிறுதியில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த் 2-6, 3-6 என துருக்கியின் யான்கி எரலிடம் தோல்வியடைந்தார்.


* அசாமின் கவுகாத்தியில் நடக்கவுள்ள (அக். 6-11) உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் (கலப்பு அணி) தொடரில் இந்திய அணி, 'எச்' பிரிவில் ஹாங்காங், நேபாளம், கானா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

Advertisement