ரஷ்ய துணை பிரதமருடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு
மாஸ்கோ:ரஷ்யா சென்றுள்ள நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அந்நாட்டு துணைப் பிரதமரை சந்தித்து ராணுவ -தொழில்நுட்ப உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேசினார்.
அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு நடவடிக்கைக்கு பின் நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா சென்றார்.
அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சிலின் செயலர் செர்ஜி ஷோய்குவுடன் விரிவாக பேச்சு நடத்தினார்.
அப்போது இருதரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி சார்பில், ரஷ்ய அதிபர் புடினை இந்தியா வரும்படி அழைப்பு விடுத்தார். பிரதமரின் அழைப்பை ஏற்று புடினும் இந்தியா வர சம்மதித்தார்.
பின்னர் பிரதமர் மோடியும், புடினும் தொலைபேசியில் உரையாடினர்.
அப்போது, ரஷ்யா -- உக்ரைன் போர் நிறுத்தம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் தெரிவித்தார்.
இந்தநிலையில், அஜித் தோவல், ரஷ்ய துணைப் பிரதமர் டெனிஸ் மந்துரோவைச் சந்தித்து பேசினார்.
ரஷ்யாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான ராணுவ தொழில்நுட்பஒத்துழைப்பின் பிரச்னைகள், சிவில் விமானம், உலோகம் மற்றும் வேதியியல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு கூட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதுகுறித்து இருவரும்விவாதித்தனர்.
மேலும்
-
முத்தாலம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா
-
காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் குறித்த நுால் வெளியீடு தெய்வத்தமிழ் ஆய்வு மாநாடு துவக்கம்
-
சேதமடைந்த அரசு பேருந்து படிக்கெட் பயணியர் கால்களை பதம் பார்க்கும் அவலம்
-
செல்லியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா விமரிசை
-
தேவரியம்பாக்கத்தில் ஆடித்திருவிழா
-
அதிபரை கைது செய்ய உதவினால் ரூ.415 கோடி பரிசு