அ.தி.மு.க., பேனர் சரிந்து விழுந்து இருவர் காயம்

ஆம்பூர், :திருப்பத்துார் மாவட்டத்திற்கு ஆக., 13, 14ல் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பேரணி நடத்த, அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி வருகை தர உள்ளார்.

அவரை வரவேற்க, அ.தி.மு.க., நிர்வாகிகள் சார்பில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் பைபாஸ் சாலை மேம்பாலத்தின் மீது பேனர் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு, பலத்த சூறாவளி காற்று வீசியதில், பேனர் கிழிந்து, அந்த வழியாக மொபட்டில் சென்ற, இருவர் மீது விழுந்தது. இதில் சிக்கிய இருவரும், லேசான காயமடைந்தனர். அவர்களை, பொதுமக்கள் மீட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

Advertisement