தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

1

சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு;


தென்னிந்திய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஆக.10ல் தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், அரியலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஆக.10ல் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


மேலும் நாளை (ஆக.11) முதல் ஆக்.16 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை இன்றும் (ஆக.10) நாளையும் (ஆக.11) லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.


இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement