நள்ளிரவில் பூத்த பிரம்ம கமலம்  ; தீபாராதனை செய்து வழிபாடு

திருப்பூர்; பிரம்ம கமலம் பூ மலர்ந்ததால், இரவு, 11:00 மணிக்கு, வீட்டில் இருந்தவர்கள் தீபாராதனை செய்து வழிபட்டனர்.

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, மண்ணரை, சத்யா காலனியை சேர்ந்தவர் சேர்மராஜன். இவரது வீட்டில், பிரம்ம கமலம் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, இவரது வீட்டில் இருந்த செடியில், பிரம்ம கமலம் பூ மலர துவங்கியது. இரவு, 8:00 மணிக்கு துவங்கி 11:00 மணிக்கு முழுவதும் மலர்ந்திருந்தது.

வீட்டில் இருந்தவர்கள் காத்திருந்து, மலர் முழுமையாக மலர்ந்ததும், தீபாராதனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து, நேற்று பிரம்ம கமலம் மலர், திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டது.

 இதேபோல, அவிநாசி, கைகாட்டிப்புதுாரில் ரேவதி, தி ருப்பூர் - முத்தணம்பாளையம் குமார் தனபாக்கியம், ஊத்துக்குளியில் உள்ள ராமசாமி ஆகியோரின் வீடுகளிலும், பிரம்ம கமலம் பூத்தது. திருவிளக்கேற்றி அனைவரும் வழிபட்டனர். அருகில் வசிப்போரும், பிரம்ம கமலம் பூக் களை பார்த்து, ஆச்சரியம் அடைந்து வணங்கி சென்றனர்.

Advertisement