தேவரியம்பாக்கத்தில் ஆடித்திருவிழா 

தேவரியம்பாக்கம்,:வாலாஜாபாத் அடுத்த, தேவரியம்பாக்கம் கிராமத்தில் தாந்தோன்றியம்மன் மற்றும் கங்கையம்மன் கோவில் ஆகிய கோவில்களில், ஆடித் திருவிழா நேற்று வெகுவிமரிசையாக நடந்தது.

இந்த விழா முன்னிட்டு, நேற்று காலை, 11:00 மணி அளவில் தாந்தோன்றியம்மன் மற்றும் கங்கையம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் செய்தனர். பகல், 2:00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி, பூங்கரகம் ஊர்வலம், கனி அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு மலர் அலங்காரத்தில், அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

Advertisement