ராஜஸ்தானில் சோகம்; சாலை விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு

5


ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.


ராஜஸ்தான் மாநிலம், தவுசா மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில் வேன் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 7 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயம் அடைந்தனர்.


இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


கதுஷ்யாம்ஜி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வேன் வீடு திரும்பி கொண்டிருந்த போது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த விபத்து அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது. துாக்க கலக்கத்தில் வாகனம் ஓட்டும்போது சற்று கண் அசந்தாலும் பெரும் விபத்து நேரிட்டு விடும். எனவே, இரவு, அதிகாலை நேரங்களில் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதை இந்த விபத்து உணர்த்துகிறது.

Advertisement