டாடா 'ஹேரியர், சபாரி' ஆட்வெஞ்சர் ஆப்ரோடிங் செய்ய 'டீசல்' இன்ஜினில் வருகை

'டாடா' நிறுவனத்தின் 'ஹேரியர்' மற்றும் 'சபாரி' எஸ்.யூ.வி., கார்கள், 'அட்வெஞ்சர் எக்ஸ்' மற்றும் 'எக்ஸ் பிளஸ்' ஆகிய இரு புதிய மாடல்களில் வருகின்றன. சபாரி கார், 'அட்வெஞ்சர் எக்ஸ் பிளஸ்' மாடலில் மட்டும் வந்துள்ளது.
ஹேரியர் அட்வெஞ்சர் எக்ஸ்
இந்த மாடல் கார், பிரத்யேகமான 'பச்சை' நிறத்தில் வருகிறது. ஆட்டோ எல்.இ.டி., லைட்டுகள் மற்றும் வைப்பர்கள், புதிய 17 அங்குல அலாய் சக்கரங்கள், டூயல் டோன் நிற உட்புறம், இரு 10.25 அங்குல டிஸ்ப்ளேக்கள், மூன்று ஆப்ரோட் மோடுகள், பவர்டு டிரைவர் சீட், 360 டிகிரி கேமரா, பேனரோமிக் சன் ரூப் ஆகிய அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
அட்வெஞ்சர் எக்ஸ் பிளஸ்
இந்த மாடல், இரு கார்களுக்கும் வருகிறது. 'அட்வெஞ்சர் எக்ஸ்' மாடலுடன் ஒப்பிடுகையில், அடாஸ் லெவல் - 2 பாதுகாப்பு, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்ட் வசதி, கார் நிலையாக இருக்க 'இ.எஸ்.சி.,' வசதி ஆகிய அம்சங்கள் கூடுதலாக வருகின்றன. இரு மாடல்களுக்கு ஆறு காற்றுப்பைகள் அடிப்படை அம்சமாகும்.
பிரத்யேகமான 'காப்பர்' நிறத்தில் வரும் சபாரி காருக்கு, புதிய 18 அங்குல அலாய் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன.
இரு மாடல்களும், 2 லிட்டர், 4 - சிலிண்டர் டீசல் இன்ஜினில் மட்டுமே வருகின்றன. அதேபோல், மேனுவல் மற்றும் ஆட்டோ கியர் பாக்ஸ்கள் உள்ளன.