முத்தாலம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி 15வது வார்டில், முத்தாலம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த வெள்ளி அன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று காலை 10:00 மணிக்கு அப்பகுதி திரவுபதியம்மன் கோவிலில் இருந்து, பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து முத்தாலம்மனுக்கு பாலபிஷேகம் செய்தனர்.

மதியம் 1:00 மணிக்கு, வாலாஜாபாத் பாலாற்றில் கங்கை திரட்டி அங்கிருந்து மேள, தாளத்துடன் கோவிலை வந்தடைந்து கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது. இரவு 7:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்தார்.

Advertisement