அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா

காஞ்சிபுரம்:ஆடி மாத நான்காவது ஞாயிற்று கிழமையான நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் மாநகராட்சி 27 வது வார்டு கன்னிகாபுரத்தில் உள்ள கன்னியம்மன், வேலாத்தம்மன் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் வேலாத்தம்மன் காஞ்சி காமாட்சி அம்மன் அலங்காரத்தில் அருள்பசாலித்தார். மதியம 1:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடந்தது.
அன்னை ரேணுகாம்பாள்
காஞ்சிபுரம் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாள் கோவிலில் 50வது ஆண்டு ஆடி திருவிழாவையொட்டி, மூலவர் அம்மன் வேங்கடமுடையான் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பாம்பன் அருட்சித்தர் சஞ்சீவி ராஜா சுவாமி அருளுரை வழங்கினார். ஜெயஸ்ரீ நாட்டிய பள்ளி மாணவியரின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது.
சாமத்தம்மன்
காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில் மாரியம்மன் மற்றும் சாமத்தம்மன் கோவில் ஆடி திருவிழாவையொட்டி நேற்று மாலை 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைக்கும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்வு நடந்தது.
முத்து மாரியம்மன்
காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் கிராமம், பாரதியார் நகரில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் 35வது ஆண்டு ஆடி திருவிழாவையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு அம்மன் ஊஞ்சல் சேவை உத்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 12:00 மணிக்கு கூழ்வார்த்தலும், 2:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 7:00 மணிக்கு குழந்தைகளின் கலைநிகழ்ச்சியும் நடந்தது.
புவனேஸ்வரி அம்மன்
காஞ்சிபுரம் ஓரிக்கை பேராசிரியர் நகர் பகுதி 2ல் உள்ள குபேர விநாயகர் கோவிலில் உள்ள புவனேஸ்வரி அம்மன் மற்றும் மாரியம்மனுக்கு ஆடி திருவிழா நேற்று நடந்தது. இதில், காலை 9:00 மணிக்கு அம்மன் பூங்கரகம் வீதியுலாவும், மதியம் 1:30 மணிக்கு கூழ்வார்த்தலும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர் நகர் 2 வது பகுதியை சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.
முத்து மாரியம்மன்
காஞ்சிபுரம் ஓரிக்கை அண்ணா நகர், சிவபுரத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகர் மற்றும் முத்து மாரியம்மன் கோவிலில் 56வது ஆண்டு ஆடி திருவிழாவையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு அம்மன் பூங்கரகம் வீதியுலாவும், மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்த்தலும், இரவு 9:00 மணிக்கு அம்மனுக்கு கும்பம் படையலிடப்பட்டது. தொடர்ந்து உத்சவர் அம்மன் மலர் அலங்காரத்தில் வீதியுலா வந்தார்.
மேலும்
-
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
-
மேக்னைட் 'கருப்பு எடிஷன்'
-
டாடா 'ஹேரியர், சபாரி' ஆட்வெஞ்சர் ஆப்ரோடிங் செய்ய 'டீசல்' இன்ஜினில் வருகை
-
ஹோண்டா ஷைன் 100 டி.எக்ஸ்., ஸ்டைல், அம்சங்கள் 'அப்கிரேட்'
-
ராஜஸ்தானில் சோகம்; சாலை விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு
-
டில்லி அரசியலில் பரபரப்பை கிளப்பிய கிளப் தேர்தல்!