கேலி செய்யப்பட்ட பீகார் பெண் விவகாரத்தில் காங்கிரஸ் மன்னிப்பு கேட்குமா: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கேள்வி

புதுடில்லி: பீஹாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தின்போது, பீஹார் பெண் மின்டா தேவியை கேலி செய்த காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சி எம்பிக்களை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ விமர்சித்துள்ளார்.
தேர்தல் ஆணையம், ஆளும் பாஜவுடன் கூட்டுச் சேர்ந்து வாக்காளர்களை நீக்குவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக, டில்லியில் காங்கிரஸ் எம்பி பிரியங்கா தலைமையில் எதிர்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் பிரியங்கா உள்ளிட்ட எம்பிக்கள், பீஹாரை சேர்ந்த மின்டா தேவி வயது 124 என்று கேலி செய்யும் விதமாக டி சர்ட் அணிந்து போராடினர். மின்டா தேவிக்கு 35 வயதுதான் ஆகிறது. அவருக்கு 124 என்று தேர்தல் ஆணைய கணக்கெடுப்பு படிவத்தில் தவறாக பதிவுசெய்யப்பட்டு வாக்காளர் அடையாள அட்டையில் அச்சிடப்பட்டிருந்தது. அந்த புகைப்படத்தை எதிர்கட்சி எம்பிக்கள் பயன்படுத்தினர். மின்டா தேவியின் புகைப்படத்தை பயன்படுத்தியதை அடுத்து சர்ச்சை வெடித்தது.இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணான மின்டா தேவி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து, மறுநாள் இன்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சி எம்பிக்களின் கேலி செய்த செயலை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாாக கிரண் ரிஜிஜூ பதிவிட்டுள்ளதாவது:
"நாள் முழுவதும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மின்டா தேவியின் புகைப்படத்தைப் பயன்படுத்தினர், அவருக்கு 124 வயது என்று கேலி செய்தனர், அவர்களின் செயலுக்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்குமா?
"கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அமைச்சர் கே.என். ராஜண்ணா, காங்கிரஸ் தலைமையிலான அரசை குற்றம் சாட்டி பேசிய நிலையில், காங்கிரஸ் மேலிடம் அவருக்கு அழுத்தம் கொடுத்தது. அதனை தொடர்ந்து அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும் அந்த பதிவில் இணைத்துள்ள வீடியோவில்,முதலில் காங்கிரஸ் எம்பி பிரியங்கா வாக்காளர் பட்டியலில் நடந்த மோசடி குறித்து செய்தியாளர்களிடம் பேசுகிறார், பின்னர் மின்டா தேவி ஊடகங்களுக்கு பேசும்போது,
1990 இல் பிறந்த 35 வயதான என்னை, தேர்தல் ஆணையத்தின் தரவுகளில் உள்ள எழுத்தர் பிழையையும், ஒப்புதல் இல்லாமல் தனது படத்தைப் பயன்படுத்தியதற்காக எதிர்க்கட்சி எம்.பி.க்களையும் கடுமையாக சாடினார்.
இவ்வாறு கிரண் ரிஜிஜி பதிவிட்டுள்ளார்.


மேலும்
-
விதிகளை மீறி அதிகமான நேரம் பணியாற்றிய விமானிகள்; ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
-
இஸ்ரோ ஏவும் கனரக அமெரிக்க செயற்கைக்கோள்!
-
நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்
-
பூத்துக்குலுங்கிய பிரம்ம கமலம்
-
இந்தியாவின் புதிய கிராண்ட் மாஸ்டர் ரோஹித் கிருஷ்ணா!
-
'தினமலர்' ஷாப்பிங் திருவிழா நாளை துவக்கம்; விடுமுறையை கொண்டாட தயாராகுங்க