விதிகளை மீறி அதிகமான நேரம் பணியாற்றிய விமானிகள்; ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

1


புதுடில்லி: விமானிகளின் விமான பணி நேரத்தை விட, அதிக நேரம் பணியாற்றியதால், ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கிய பிறகு, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். அந்த வகையில், ஏர் இந்தியா விமானத்தில் அதிகாரிகள் சோதனை நடத்திய போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, விமான நிறுவனத்தின் மேலாளர் விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய தவறிவிட்டார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.



இதற்கு, ''எல்லை தொடர்பான வான்வெளி மூடலைத் தணிக்க வழங்கப்பட்ட அனுமதியின் மாறுபட்ட விளக்கம் காரணமாக பணியமர்த்தல் பிரச்னை எழுந்தது. சரியான விளக்கம் எங்களுக்கு தெரிவிக்கப்பட்ட உடனேயே இது சரி செய்யப்பட்டது. விதிகளுக்கு முழுமையாக இணங்குகிறது'' என ஏர் இந்தியா விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.


தற்போது, நிர்ணயிக்கப்பட்ட 10 மணி நேர உச்ச வரம்பை காட்டிலும் அதிகமாக, இரண்டு பெங்களூரு-லண்டன் விமானங்களில் பைலட்டுகள் பணியாற்றியதை கண்டறிந்ததை அடுத்து ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Advertisement