'தினமலர்' ஷாப்பிங் திருவிழா நாளை துவக்கம்; விடுமுறையை கொண்டாட தயாராகுங்க

கோவை: மூன்று நாள் பள்ளி, கல்லுாரிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை. பிள்ளைகளை அழைத்துக் கொண்டு எங்கு செல்வது எனத் தெரியவில்லை. அதே கோவில், அதே சினிமா, அதே மால் என, பார்த்துப் பார்த்து சலித்து போன இடங்கள்.

ஊர் முழுவதும் சுற்றி வந்தாலும், ஏதோ ஒன்று 'மிஸ்' ஆகும் எண்ணம் அனைவருக்கும் இருக்கத்தான் செய்கிறது. 'ஆயிரம், ஆயிரமாய் செலவழித்த போதும் ஒரு திருப்தி இல்லையே,' என்ற எண்ணம் இருக்கும். அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்தாலும், ஏனோ 'ஷாப்பிங்' திருப்தி இருப்பதில்லை.

கோவை மக்களின் இந்த ஏக்கத்தை தீர்ப்பதற்காகவே, ஷாப்பிங் திருவிழாவை நடத்துகிறது நமது 'தினமலர்' நாளிதழ்.

ஒவ்வொரு ஆண்டும் இல்லத்தரசிகள், குடும்பத்தலைவர்கள், குட்டீஸ் என, அனைத்து தரப்பினரின் தேவைகளை அறிந்து ஒரே இடத்தில், அனைத்தும் கிடைக்கும் வகையில் 'தினமலர்' நாளிதழ் சார்பில், வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது.

இந்தாண்டு 'தினமலர்' நாளிதழ் மற்றும் சத்யா நிறுவனம் இணைந்து நடத்தும், ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, கோவை கொடிசியா வளாகத்தில் நாளை துவங்குகிறது; வரும், 18ம் தேதி நிறைவடைகிறது.

முத்தான மூன்று கொடிசியாவின் மூன்று அரங்குகளில், 300க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைகின்றன. கண்ணை கவரும் வண்ணங்களில், பெரிய எல்.இ.டி., டி.வி., க்கள், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், பாத்திரங்கள், மைக்ரோ ஓவன் என, இல்லத்தரசிகளின் இனிய தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகள் இடம் பெற உள்ளன.

பீரோ, திரைச்சீலைகள், மசாலா பொருட்கள், குடை, வீட்டு அலங்காரப் பொருட்கள், எல்.இ.டி., விளக்குகள், எண்ணெய் இல்லாமல் பொறிக்க எந்திரம்... இப்படி ஒவ்வொரு ஆண்டும் புதிய பொருட்களின் அணிவகுப்புக்கு குறைவிருக்காது.

இந்த ஆண்டும் ஒவ்வொருவரின் தேவையை பூர்த்தி செய்யும் வீட்டு உபயோகப் பொருட்கள் அணிவகுக்க உள்ளன. கட்டில் மெத்தை, சோபா, டீப்பாய், டைனிங் டேபிள் இப்படி இல்லத்துக்கு தேவையான அனைத்தையும் அள்ளலாம்.

பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பொருட்கள், கலர்புல் ஜிமிக்கி கம்மல், பெண்களின் கூந்தலுக்கு தேவையான பூ வேலைப்பாடுடன் ஹேர் கிளிப், கல் நெக்லஸ், பேஷியல் க்ரீம், நெயில் பாலீஷ், வாசனைத் திரவியங்கள், விதவிதமான ஹேண்ட் பேக்குகள், டாப்ஸ் என, கண்காட்சியின் அரங்குகளில், இளம் பெண்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அரங்குகளும் இடம் பெற உள்ளன.

குட்டீஸ்க்கு ஏராளம் யாரை வேண்டுமானாலும் திருப்திபடுத்தி விடலாம். நம்ம வீட்டு குட்டீசை திருப்திபடுத்துவது முடியாத காரியம். அந்தளவுக்கு அவர்களின் தேவை இருக்கும். 'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சி எப்போதும், குட்டீஸ் ராஜ்ஜியமாகவே இருக்கும். பெற்றவர்களின் சந்தோஷம் குழந்தைகளை குஷிப்படுத்தி பார்ப்பதில் தான் இருக்கிறது.

குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டுகள் அடங்கிய, 'கிட்ஸ் ஜோன்' க்கு எப்போதும் தனி கிராக்கி இருக்கும். கார், பைக், போட் ரைடு, சிக்கு, புக்கு ரயிலு என, உள்ளே நுழைந்தாலே எதில் விளையாடுவது என்று திக்குமுக்காடித்தான் போவீர்கள்.

கார், பைக் மட்டும் தானா என்பவர்களுக்கு, இங்கு இருக்கு பாலைவனக் கப்பல். ஆமாங்க, ஒட்டகத்தில் ஜாலியாக அடிக்கலாம் ஒரு ரவுண்டு. கண்காட்சியில், 250க்கும் அதிகமான அரங்குகளிலும், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் மட்டுமில்லை; வீட்டையே வாங்கும் அளவுக்கு அரங்கங்கள் இடம் பெற உள்ளன.

பிரமாண்ட, 'டிவி'க்கள் முதல், பிரமிக்க வைக்கும் ஸ்கோடா கார்கள் வரை கண்காட்சியில் புக் செய்யலாம்; சந்தோசமாக வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்.

இவை அனைத்தும் ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைக்கிறது, 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ' கண்காட்சி. கோவையின் குளு, குளு சீதோஷ்ண நிலையில், கொடிசியாவில் கண்காட்சி நடக்கும் ஒவ்வொரு ஹாலிலும் 'சில்'லுன்னு ஒரு 'ஷாப்பிங்' பண்ணலாம்.

இந்த கண்காட்சி, நாளை முதல் வரும் 18ம் தேதி வரை, தினமும் காலை 10:30 முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது.

@block_B@

கரம் கோர்ப்பவர்கள்

கோவையில் 'தினமலர்' நாளிதழ் நடத்தும் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சியை அல்ட்ரா நிறுவனம், கோவை லட்சுமி, வுட் ஸ்பார்க், நியூ மென்ஸ், மற்றும் ஆல்பா பர்னிச்சர், பேபர், ஆகிய நிறுவனங்கள் கோ-ஸ்பான்ஸர்களாக கரம் கோர்க்கின்றன. இங்கு கூடுதல் சலுகைகள் காத்திருக்கின்றன. விடுமுறையை உற்சாகமாக கொண்டாட ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சியை விட, சரியான தேர்வு இருக்க முடியாது. ஆகவே பயன்படுத்திக் கொள்வீர்!

உண்டுகளிக்க உணவிருக்கு

'பர்ச்சேஸ்' முடிச்சாச்சு... அடுத்து என்ன, வயிறு நிரம்ப உண்ண உணவு தான். 'புட்கோர்ட்' ல் உண்ண, உண்ண திகட்டாத பிரியாணி, ஐஸ்க்ரீம், நுாடுல்ஸ் என, நாக்குக்கும், மனதுக்கும் திருப்தி அளிக்கும் புட்கோர்ட் இடம்பெற உள்ளது. சைவம், அசைவம் என, 'அத்தனையும் அம்புட்டு ருசி' எனச் சொல்லும் அளவுக்கு தனித்தனி ஸ்டால்களில் இடம் பெற உள்ளன.block_B

Advertisement