பூத்துக்குலுங்கிய பிரம்ம கமலம்

பல்லடம்; ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மட்டுமே பூக்கும் அரிய வகை தாவரம்பிரம்ம கமலம். ஹிந்துக்கள் இதை புனிதமாக கருதி வழிபாடு செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

அவ்வகையில், பல்லடத்தை அடுத்த, காளி வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மனைவி பிரியா கூறுகையில், ''கடந்த, 4 ஆண்டுகளாக பிரம்ம கமலம் செடியை வளர்த்து பராமரித்து வருகிறோம். இதுவரை இச்செடியில் பூ பூத்ததில்லை. நேற்று முன்தினம் நள்ளிரவு, 11.30 மணிக்கு, மூன்று பூக்கள் பூத்தன. முதல் முறையாக, மூன்று பூக்கள் பூத்துக்குலுங்கியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது,'' என்றார்.

l திருமுருகன்பூண்டி நகராட்சி, மகாலட்சுமி நகரை சேர்ந்த ராஜன் ஜீவா என்பவரது வீட்டிலும் நேற்று முன்தினம் இரவு பிரம்ம கமலம் பூத்தது. செடிக்கு முன் கோலமிட்டு, தீபம் ஏற்றி, வழிபாடு செய்தனர்.

Advertisement