இந்தியாவின் புதிய கிராண்ட் மாஸ்டர் ரோஹித் கிருஷ்ணா!

அல்மாட்டி: இந்தியாவின் புதிய கிராண்ட் மாஸ்டர் ஆனார் ரோகித்.
இந்திய செஸ் வீரர் ரோகித் கிருஷ்ணா 20. தமிழகத்தின் சென்னையை சேர்ந்தவர். கடந்த மார்ச் மாதம் சுவீடனில் நடந்த கிராண்ட் மாஸ்டர் தொடரில் 9 சுற்றில் 6.5 புள்ளி எடுத்தார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான முதல் அந்தஸ்தை எட்டினார். அடுத்து துபாய் ஓபன் தொடரில் 9 சுற்றில் 5.5 புள்ளி எடுக்க, இரண்டாவது அந்தஸ்தை அடைந்தார்.
தற்போது கஜகஸ்தானில் அல்மாட்டியில் மண்டல ஓபன் சர்வதேச செஸ் தொடரில் பங்கேற்றார். இதில் ரோகித் கிருஷ்ணா, கடைசி சுற்றில் (9 வது) ஆர்மேனியாவின் ஆர்தர் தவ்த்யனை வென்றார். 6.0 புள்ளி எடுத்து 8வது இடம் பிடித்தார். தவிர, 'பிடே' தரவரிசையில் 15.1 புள்ளி பெற்றார். இதையடுத்து சர்வதேச தரவரிசையில் மொத்தம் 2500 புள்ளிகள் என்ற மைல்கல்லை எட்ட, மூன்றாவது அந்தஸ்தை அடைந்தார்.
தற்போது இந்தியாவின் 89 வது கிராண்ட்மாஸ்டர் ஆனார். இத்தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்தியாவின் ஆதித்யா, 9 சுற்றில் 5 வெற்றி, 5 'டிரா' செய்து, 6.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் ஆனார்.

மேலும்
-
மீண்டும் சிறை செல்கிறார் கன்னட நடிகர் தர்ஷன்; ஜாமின் மனுவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
-
தொழிலதிபர் மகளுடன் சச்சின் மகனுக்கு ரகசிய நிச்சயதார்த்தம்: யார் இந்த சானியா சந்தோக்?
-
ஓடும் ரயிலில் சிறுமியிடம் அத்துமீறல் மத்திய பாதுகாப்பு படை வீரருக்கு சிறை
-
'விளைநிலத்தில் எண்ணெய் குழாய் முதல்வர் மீது விவசாயிகள் கோபம்'
-
செம்பை சங்கீத உற்சவம் 17ல் பொன்விழா துவக்கம்
-
ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.1.64 கோடி மோசடி