ராகுலுடன் சந்திரபாபு நாயுடு ரகசிய கூட்டணி; ஜெகன்மோகன் புதுகுண்டு

6

அமராவதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் எம்பி ராகுலுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், இதன் காரணமாகவே ஆந்திராவில் நடந்த ஓட்டு திருட்டு குறித்து ராகுல் பேசவில்லை என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.



இது தொடர்பாக அமராவதியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது; ஆந்திர சட்டசபை தேர்தலில் போது, மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை விட, எண்ணப்பட்ட ஓட்டுகளின் எண்ணிக்கையில் வேறுபாடு உள்ளது. டில்லி, மஹராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் நடந்த தேர்தல்களில் ஓட்டு திருட்டு நடந்ததாகக் குற்றம்சாட்டும் ராகுல், ஆந்திராவைப் பற்றி மட்டும் ஏன் பேசுவதில்லை. ஏனெனில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் மூலமாக, ராகுலுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசி வருகிறார்.


அண்மையில் டில்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் இண்டி கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஆம்ஆத்மி தோல்வியை சந்தித்தது. அதைப்பற்றி ஏன் ராகுல் பேசவில்லை. ராகுல் தான் செய்யும் செயல்களில் நேர்மையில்லாதவர். அவரைப் பற்றி கருத்து சொல்ல என்ன இருக்கிறது, எனக் கூறினார்.

Advertisement