'முட்டாள்தனமாக பேச வேண்டாம்': பாக்., பிரதமருக்கு ஓவைஸி அறிவுரை

8


ஐதராபாத்: ''சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக மிரட்டல் விடுத்துள்ள பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முட்டாள்தனமாக பேச வேண்டாம்'', என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஓவைஸி கூறியுள்ளார்.


ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தபோதும் அதனை இந்திய கண்டுகொள்ளவில்லை.
இந்த ஒப்பந்தத்தை மீண்டும் செயல்பாட்டுக்குகொண்டு வர வேண்டும் என அந்நாடு கூறி வருகிறது. ஆனால், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தால் மட்டுமே அது பற்றி யோசிக்க முடியும் என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


இதனிடையே, இஸ்லாமாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியதாவது: பாகிஸ்தானுக்கான ஒவ்வொரு சொட்டு நீரையும் எதிரி பறித்து சென்றுவிட முடியாது. எங்களுக்கான தண்ணீரை நிறுத்துவேம் எனவும் மிரட்டக்கூடாது. அப்படி செய்தால், பாகிஸ்தான் உங்களுக்கு ஒரு பாடம் நடத்தும். அதனை நீங்கள் மறக்க மாட்டீர்கள். சர்வதேச ஒப்பந்தம் என்ற அடிப்படையில், பாகிஸ்தான் தனது இறையாண்மையை சமரசம் செய்யாது. இவ்வாறு அவர் கூறினார்.


@quote@அதற்கு முன்னர், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீரும், இதேபோன்ற மிரட்டலை விடுத்துள்ளார். quote

வேலை செய்யாது



இது தொடர்பாக ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஓவைஸி கூறியதாவது: பிரமோஸ் ஏவுகணை எங்களிடம் உள்ளது. பாகிஸ்தான் பிரதமர், ' நான் நீச்சல் உடையில் இருக்கும் போது எங்களது விமானதளம் தாக்கப்பட்ட செய்தியை அறிந்தேன்' எனக்கூறியுள்ளார். அவர் முட்டாள்தனமாக பேசக்கூடாது. அவர் ஒரு நாட்டின் பிரதமர். அதுபோன்ற மொழிகள் இந்தியாவை பாதிக்காது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்துள்ளது. உங்களது வேலையை பார்க்காமல் எங்களை மிரட்டுகிறீர்கள். அதுபோன்ற மிரட்டல்கள் வேலை செய்யாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement