இறந்தவர்களுடன் டீ குடிக்கும் வாய்ப்பு; தேர்தல் ஆணையத்துக்கு நன்றி சொன்ன ராகுல்

புதுடில்லி: இறந்தவர்களோடு டீ குடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி என்று காங்கிரஸ் எம்பி ராகுல் தெரிவித்துள்ளார்.
லோக்சபா மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டினார். போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள் என அடுக்கடுக்கான புகார்களை கூறி, ஆவணங்களை வெளியிட்டார்.
அவரது இந்தக் குற்றச்சாட்டு குறித்து ராகுல் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அடுத்தடுத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆனால், தனது குற்றச்சாட்டுகளில் இருந்து பின்வாங்க மறுத்து வரும் ராகுல், தற்போது தேர்தல் ஆணையத்தை கிண்டல் செய்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வாக்காளர் பட்டியல் இருந்து நீக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் ராகுல் அமர்ந்து டீ குடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அந்த வீடியோவுடன், "வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்திருக்கின்றன. இறந்தவர்களுடன் டீ குடிக்கும் வாய்ப்பு எனக்கு இதுவரை கிடைத்ததில்லை. தற்போது அது நிகழ்ந்துள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்துக்கு நன்றி," என ராகுல் பதிவிட்டுள்ளார்.
@block_B@
தேர்தல் ஆணையம் விளக்கம்
இதனிடையே, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ராகுல் செய்து வரும் பிரசாரத்திற்கு, கடந்த ஒரு மணிநேரத்தில் 25 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் மற்றொரு பதிவில் குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தப் பதிவை குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணையம், பொய்யான மற்றும் தவறாக வழிநடத்தப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளது. சட்ட விதிகளுக்கு உட்பட்டே ஒவ்வொரு வாக்காளர்களும் பட்டியலில் சேர்க்கப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.block_B


மேலும்
-
தமிழக போலீஸ் அதிகாரிகள் மூவருக்கு ஜனாதிபதி பதக்கம்!
-
ஓட்டு திருட்டு என்ற சொல்லை பயன்படுத்தி இழிவுபடுத்தக்கூடாது: தேர்தல் கமிஷன்
-
தெருநாய்க்கடி: தேசிய பாரா விளையாட்டு வீரர் உள்பட இருவர் பலி
-
வாக்குறுதியைக் கேட்கும் போது கசக்கிறதா? இபிஎஸ் கேள்வி
-
இந்தியா - சிங்கப்பூர் உறவை வலுப்படுத்த 3வது வட்டமேசை மாநாட்டில் உறுதி
-
ஆன்லைனில் ரூ.48.59 லட்சம் மோசடி; பண ஆசை காட்டிய வாலிபர் கைது