பிரியங்கா செய்தது பிடிக்கவில்லை: சொல்கிறார் மின்டா தேவி

பாட்னா: '' எனது படம் இடம்பெற்ற டி சர்ட்களை அணிய அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது. அவர்கள் செய்தது எனக்கு பிடிக்கவில்லை '' என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறித்து வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்த சர்ச்சையில் சிக்கிய மின்டா தேவி கூறியுள்ளார்.
பீஹாரில் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக, கூட்டத் தொடர் துவங்கியதில் இருந்தே, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் ஆர்ப்பாட்டம் நடத்தும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், நேற்று சபை அலுவல்கள் துவங்கும் முன், மகர் துவார் பகுதியில், வழக்கம் போல கூடினர்.
@block_P@காங்., மூத்த தலைவர் சோனியா உட்பட பலரும் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில், பல எம்.பி.,க்கள் 'டி சர்ட்' அணிந்து வந்தனர். அதன் முன்பக்கத்தில், ஒரு பெண் புகைப்படமும், அதன் கீழ், 'மிண்டா தேவி' என்றும் எழுதப்பட்டிருந்தது. பின்புறத்தில், '124 நாட் அவுட்' என எழுதப்பட்டிருந்தது. குறிப்பாக பிரியங்கா உள்ளிட்ட பெண் எம்.பி.,க்கள் இந்த டி சர்ட்டை அணிந்து வந்தனர். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. பீஹாரைச் சேர்ந்த முதல்முறை வாக்காளராக மிண்டா தேவியின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றது. இவரது வயது 124 என, அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
block_P
உலகிலேயே 115 வயதுடைய நபர் தான் மிகவும் வயதானவர் என, கூறப்படுகிறது. அப்படியிருக்கையில், அவரைக் காட்டிலும் 9 வயது மூத்தவராக மிண்டா தேவி இருக்கிறாரா என்ற கேள்வியை காங்., எழுப்புகிறது. மேலும், மிண்டா தேவி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. அவரது பெயரை வைத்து கள்ள ஓட்டுப்போட்டிருக்க வேண்டும் என, அக்கட்சி குற்றஞ்சாட்டுகிறது. இதை குறிக்கும் விதமாகவே, மிண்டா தேவியின் பெயரையும், வயதையும் குறிப்பிட்டு, டி சர்ட் அணிந்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
@quote@'வரைவு வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட சிறு தவறு காரணமாக வயது தவறாக அச்சிடப்பட்டுள்ளது. அந்த வாக்காளரின் வயது, 35 தான். இது சரி செய்யப்படும்' என, தேர்தல் கமிஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
quote
இந்நிலையில், மின்டா தேவி அளித்த பேட்டியில் கூறியதாவது: எனது புகைப்படம் அடங்கிய டீ சர்ட்டை அணிய யார் உரிமை கொடுத்தது. எனக்கு அவர்கள் யார் ?பிரியங்கா, ராகுல் எனக்கு என்ன உறவு? எனது புகைப்படம் அடங்கிய டீசர்ட்டை அணிய அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தார்கள். அதனை அவர்கள் செய்திருக்கக்கூடாது. அது எனக்கு பிடிக்கவில்லை.
வாக்காளர் பட்டியல் விவரங்களில் முரண்பாடு உள்ளது. அரசு தரப்பிடம் இருந்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. எனது வயது தொடர்பாக அவர்கள் எனது நலம் விரும்பியாக மாறியது ஏன் ? எனது விவரங்கள் சரி செய்யப்பட வேண்டும். எனது விவரங்களை பதிவு செய்தவர்கள் கண்களை மூடிக்கொண்டு செய்தனரா? அரசு ஆவணங்களின்படி எனது வயது 124 என்றால் எனக்கு ஏன் முதியோர் பென்சன் வழங்கவில்லை. ஆதார் கார்டில் எனது வயது 15.07.1990 எனக்குறிப்பிடப்பட்டு உள்ளது . இவ்வாறு அவர் கூறினார்.










மேலும்
-
தமிழக போலீஸ் அதிகாரிகள் மூவருக்கு ஜனாதிபதி பதக்கம்!
-
ஓட்டு திருட்டு என்ற சொல்லை பயன்படுத்தி இழிவுபடுத்தக்கூடாது: தேர்தல் கமிஷன்
-
தெருநாய்க்கடி: தேசிய பாரா விளையாட்டு வீரர் உள்பட இருவர் பலி
-
வாக்குறுதியைக் கேட்கும் போது கசக்கிறதா? இபிஎஸ் கேள்வி
-
இந்தியா - சிங்கப்பூர் உறவை வலுப்படுத்த 3வது வட்டமேசை மாநாட்டில் உறுதி
-
ஆன்லைனில் ரூ.48.59 லட்சம் மோசடி; பண ஆசை காட்டிய வாலிபர் கைது