ஆக.19 வரை மிதமான மழை

சென்னை:வானிலை ஆய்வு மைய அறிக்கை:

மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்த, 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும்.

இதன்பின், காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிஷா இடையே கரையை கடக்க கூடும்.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மீது வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று, இடி மின்னலுடன் மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஆக., 19 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisement