ஸ்குவாஷ்: காலிறுதியில் அனாஹத்

பெகா: ஆஸ்திரேலியாவில் 'பெகா' ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் இளம் வீராங்கனை அனாஹத் சிங், நேரடியாக இரண்டாவது சுற்றில் பங்கேற்றார். ஆஸ்திரேலியாவின் கார்டுவெல் சாராவை சந்தித்தார். இதில் அனாஹத், 3-0 (11-3, 11-3, 11-4) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஆகான்ஷா சாலுங்கே, ஆஸ்திரேலியாவின் சோபியை எதிர்கொண்டார். இதில் நீண்ட போராட்டுத்துக்குப் பின் ஆகான்ஷா 3-2 (11-8, 7-11, 10-12, 11-4, 13-11) என வென்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.
இந்தியாவின் தான்வி கன்னா, இரண்டாவது சுற்றில் 2-3 (6-11, 11-2, 11-9, 5-11, 7-11) என்ற கணக்கில் எகிப்தின் ஹபிபாவிடம் போராடி தோல்வியடைந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement