கோவா அணி வெற்றி * சாம்பியன்ஸ் லீக் கால்பந்தில்...

கோவா: ஆசிய கிளப் அணிகளுக்கான சாம்பியன்ஸ் லீக், 'குரூப் ஸ்டேஜ் 2' தொடர் செப். 16-24ல் நடக்க உள்ளது. இதில் 32 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்தியாவில் நடந்த ஐ.எஸ்.எல்., தொடரின் சாம்பியன் மோகன் பகான் உட்பட மொத்தம் 29 அணிகள் நேரடியாக களமிறங்குகினறன.
மீதமுள்ள 3 அணிகளை தேர்வு செய்ய தகுதிச்சுற்று 'பிளே ஆப்' போட்டி நடந்தது. இந்தியாவில் நடந்த சூப்பர் கோப்பை வென்ற கோவா அணி, 2022ல் சாம்பியன் ஆன, ஓமனின் அல் சீப் அணியை சந்தித்தது. கோவாவில் போட்டி நடந்தது. 24 வது நிமிடத்தில் கோவா வீரர் டிராஜிக், முதல் கோல் அடித்தார்.
இரண்டாவது பாதியில் சிவெரியோ (52) ஒரு கோல் அடிக்க, கோவா 2-0 என முன்னிலை பெற்றது. அல் சீப் அணிக்கு நாசெர் (60) ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். முடிவில் கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆசிய சாம்பியன்ஸ் லீக், 'குரூப் ஸ்டேஜ் 2'க்கு தகுதி பெற்றது.