சாம்பியன் கனவில் வின்சென்ட் * சென்னை செஸ் தொடரில் அசத்தல்

சென்னை: சென்னையில், கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. நேற்று 8 வது சுற்று போட்டிகள் நடந்தன. மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன், சக வீரர் விதித் குஜ்ராத்தியை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், 32 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். ஜெர்மனியின் வின்சென்ட் கீமெர்-நெதர்லாந்தின் ஜோர்டான் வான் பாரீஸ்ட் மோதிய போட்டி 'டிரா' ஆனது. தவிர, இப்பிரிவில் நடந்த மற்ற மூன்று போட்டிகளும் 'டிரா' ஆகின.
8 சுற்ற முடிவில் வின்சென்ட், 6.0 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர்கள் அர்ஜுன் (4.5), கார்த்திகேயன் முரளி (4.5) அடுத்த இரு இடத்தில் உள்ளனர். இன்று கடைசி, 9வது சுற்று நடக்கிறது. முதலிடத்தில் உள்ள வின்சென்ட், அமெரிக்காவின் ராப்சனை சந்திக்கிறார். இதில் தோற்றாலும் முதலிடம் உறுதி என்பதால், 'மாஸ்டர்ஸ்' பிரிவில் வின்சென்ட் சாம்பியன் ஆகிறார்.
பிரனேஷ் அபாரம்
சாலஞ்சர்ஸ் பிரிவில் 10 இந்திய நட்சத்திரங்கள் விளையாடுகின்றனர். பிரனேஷ், ஹரிகாவை வென்றார். அபிமன்யு புரானிக், திப்தயனை வீழ்த்தினார். வைஷாலி, ஆர்யனிடம் வீழ்ந்தார். 8 சுற்றில், பிரனேஷ் (6.5), அபிமன்யு (6.0), லியான் (6.0) 'டாப்-3' இடத்தில் உள்ளனர்.

Advertisement