முன்னேற்ற பாதையில்... இன்று 79-வது சுதந்திர தினம்

இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலகம் வியக்கிறது. கல்வி, விவசாயம், ராணுவம் ,அறிவியல், விண்வெளி, ஐ.டி., என பல துறைகளில் கொடிகட்டி பறக்கிறோம். பொருளாதாரத்தில் 5 லட்சம் கோடி எட்டுவதை இலக்காக கொண்டுள்ளோம். இதற்கு வித்திட்ட தியாகிகளை சுதந்திர தினத்தில் போற்றுவோம். இந்தியா இந்தாண்டு நிகழ்த்திய மூன்று சாதனைகள்.
நேதாஜி
நம் நாட்டின் விடுதலைக்கு ஆயுத வழியை தேர்ந்தெடுத்தார் நேதாஜி. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களைதிரட்டி தேசிய ராணுவத்தை உருவாக்கி , ஆங்கில படையை எதிர்த்தார். இவரது ஜெய்ஹிந்த் (வெல்க இந்தியா) முழக்கம் விடுதலை உணர்வை அதிகரிக்க செய்தது
ஆக.15 ஏன்
இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக இருந்த மவுண்ட்பேட்டனுக்கு ஆக,15 மீது தனிப்பட்ட விருப்பம். ஏனெனில் இரண்டாம் உலகப் போரின் முடிவில் 1945 ஆக15 ல் தான் ஜப்பானிய வீரர்கள் இவரிடம் (ஆங்கிலேயர்களின் கிழக்கு ஆசிய கமாண்டர்) சரணடைந்தனர். இத்தேதியில் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க விரும்பினார்.
இந்தியாவுக்கு ஆக., 15-ல் சுதந்திரம் என அறிவித்ததுடன் ஜோதிடர்கள் அன்றைய நாள் சரியில்லை என்றனர். ஆனால் ஆக., 15 என்பதில் மவுண்ட் பேட்டன் உறுதியாக இருந்தார் ஆங்கிலேயர் கணக்குப்படி நள்ளிரவு 12:00 மணிக்கு தான் புதிய நாள் துவங்கும் . இந்தியர்களுக்கு அதிகாலை 5:00 மணி தான் புதிய நாள். இரு தரப்புக்கும் நேர வித்தியாசம் சாதகமாக அமைய ஆக.15 நள்ளிரவே சுதந்திரம் வழங்கப்பட்டது.
ஒற்றுமையே உயர்வு
கவிஞர் சுதந்திர போராட்ட வீரர் என பன்முக திறமை கொண்டவர் பாரதியார். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தினார். கவிதை மூலம் நாட்டின் விடுதலைக்கு உத்வேகம் அளித்தார்.
பாலம் அமைப்போம்.
காஷ்மீரில்செனாப் ஆற்றின் மீதுகட்டப்பட்ட உலகின் உயரமான (1053 அடி) ரயில் பாலம் திறக்கப்பட்டது முன்பு ஜம்முவரமைட்டுமே ரயில் போக்குவரத்து இருந்தது. தற்போது காஷ்மீர் -கன்னியாகுமரிவரை ரயில்பாதையால் இணைக்கப்பட்டுள்ளது.பாம்பனில்நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலம் திறக்கப்பட்டது. இவை இந்தியாவின் கட்டமைப்புதிறமைவெளிகாட்டுகிறது.
வானை அளப்போம்
விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்கு பயிற்சி பெறும் விதமாக ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி மையம் (ஐ.எஸ்.எஸ்.,) சென்றார் இந்திய விண்வெளிவீரர்சுபான்ஷூ சுக்லா.அங்கு தேசிய கொடியைபறக்கவிட்டார். 15 நாள்தங்கியிருந்து ஏழுஆய்வுகளி் ஈடுபட்டார்.அடுத்துககன்யான் சந்திராயன்-3 செவ்வாயில் லேண்டர் உள்ளிட்ட திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது.
ஆயுதம் செய்வோம்
காஷ்மீரின் பல்ஹாமில் பாக்., பயங்கரவாதிகளின் தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதற் குபதிலடியாக பாகிஸ்தானில் இயங்கியஒன்து பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய ஆப்பரேஷன் சிந்தூர் தாக்குதலில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள கொல்லப்பட்டனர். இதில் பிரம்மோஸ் ஏவுகணை உள்ளிட்டஉள்நாட்டு ஆயுதங்கள் முக்கியபங்காற்றியது. பிறநாடுகளுக்கு ஆயுத விற்பனைசெய்ததன் மூலம் இந்தியாவுக்கு ரூ.23,622 கோடி(2024-25) கிடைத்தது.
துளிகள்
* தேசிய கொடி 1947 ஜூலை 22-ல் அரசியல் நிர்ணய சபைால் ஏற்கப்பட்டது. வடிவமைத்தவர் ஆந்திராவின் பிங்கிலி வெங்கையா.
* தமிழகத்தில் சிறை தண்டனை பெற்ற முதல் சுதந்திர போராட்ட வீராங்கனை ருக்மணி லட்சுமிபதி. 1930 ல் ராஜாஜி தலைமையில் நடைபெற்ற உப்பு சத்யா கிரக போராட்டத்தில் பங்கேற்ற போது ஓராண்டு சிறை தண்டனை பெற்றார்.
படேல் கண்ட பாரதம்
ஆங்கிலேயருக்கு எதிராக விவசாயிகளை திரட்டி வரிகொடாமை போராட்டம் நடத்தினார் சர்த்தார் வல்லபாய் படேல் நாட்டின் முதல் துணை பிரதமராக இருந்த இவர் சிதறிகிடைந்த சமஸ்தானங்களைஇந்தியாவுடன் இணைத்தார்.
இரும்புமனிதர்என போற்றப்பட்டஇவருக்கு பெருமை சேர்க்கும் விதமாகஉலகின் உயமான சிலை(597 அடி} குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
முதல் பிரதமர்
சுதந்திரத்துக்கு பின் பிறந்தது தொடர்ந்துநீண்டகாலம் (11 ஆண்டுக்3 மாதம்) பிரதமர் பதவியில் இருப்பவர் மோடி. தேசப்பற்று மிக்கஇவர்ஆண்டுதோறும் தீபாவளியைஎல்லையில் நாட்டைபாதுகாக்கும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவது வழக்கம்.
நீண்ட போராட்டம்..
.
நாட்டின் விடுதலை போராட்டத்தில் முக்கியநிகழ்வுகள்..
* 1600- டிச., 31: பிரிட்டீஷ் கிழக்கிந்திய வர்த்தக கம்பெனி துவக்கம்.
* 1857: முதல் இந்திய விடுதலை போர் (சிப்பாய் கலகம்) வெடித்தது.
* 1858 : கிழக்கிந்திய வர்த்தக கம்பெனி ஆட்சிமுடிவு. பிரிட்டீஷ் அரசியின் நேரடி ஆட்சியின் கீழ் இந்தியா வந்தது.
* 1906: ஆங்கிலேயரின் கப்பல் வணிகத்துக்கு எதிராக தமிழகத்தின் வ.உ.சிதம்பரனார் சுதேச நீராவி கப்பல் நிறுவனத்தைதொடங்கினார்.
* 1915 தென் ஆப்ரிக்காவிலிருந்து காந்தி இந்தியா திரும்பினார். அகிம்சை முறையில் சுதந்திர போராட்டத்தை நடத்தினார்.
* 1928, டிச.,17 போலீஸ் அதிகாரி சாண்டர்சை பகத்சிங் சுட்டு கொன்றார்.
*1932- ஜன. 11: ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார் திருப்பூர் குமரன்.இவர் மீது தடியடி நடத்திய போது கையில் தேசிய கொடியுடன் உயிர் தியாகம் செய்தார்.
* 1942., ஆக.8: வெள்ளையனே வெளியேறு போராட்டம் துவக்கம்.
*1947 ஜூன் 31 இந்தியா -பாக்., பிரிவினை அறிவிப்பு
1947 ஆக.15: இந்தியா சுதந்திரம் பெற்றது.
மேலும்
-
மதுரை மாநகராட்சி மேயர் மாற்றத்தில் தடுமாற்றம்: உள்குத்து அரசியலால் தி.மு.க., தலைமை குழப்பம்
-
மகளை முன்னிறுத்தும் ராமதாஸ்: தீவிர அரசியலில் இறங்கிய மருமகள்
-
இனியும் தோல்வியை சந்திப்பார் பழனிசாமி: சாபம் விடுகிறார் பன்னீர்செல்வம்
-
ஈரோடு அருகே வாய்க்காலில் குளித்த கோவை கல்லுாரி மாணவர்கள் 2 பேர் பலி
-
அம்மன் கோவில் திருவிழா தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
-
'சிவில் சர்வீசஸ் மெயின்ஸ்' தேர்வு கையே