துாய்மை பணியாளர்களுக்கு இலவச காலை உணவு: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

சென்னை:'நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு இலவசமாக வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் , தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இதில், புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட, பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அதன்பின், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
துாய்மை பணியாளர் நலனில், இந்த அரசு பெரிதும் அக்கறை கொண்டிருக்கிறது. அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்து துாய்மை பணியாளர்களுக் காக, பல்வேறு சிறப்பு நல திட்டங்களை, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
துாய்மை பணியாளர்கள் குப்பையை கையாளும்போது ஏற்படும் நுரையீரல், தோல் தொடர்பான தொழில்சார் நோய்களை கண்டறியவும், சிகிச்சை அளிக்கவும், தனி திட்டம் செயல்படுத்தப்படும்
து ாய்மை பணியாளர்களுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் அளவிற்கு காப் பீடு இலவசமாக வழங்கப்படும்.
இதன் வாயிலாக, பணியின்போது இறக்க நேரி டும் துாய்மை பணியாளர் களின் குடும்பங்களுக்கு நல வாரிய நிதியுதவியுடன், 10 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும்
துாய்மை பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் சுயதொழில் துவங்கும்போது, திட்ட மதிப்பீட்டில், 35 சதவீதம், அதிகபட்சமாக 3.50 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
கடன் தொகையை தவறாமல் திருப்பி செலுத்து வோருக்கு, 6 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். இந்த புதிய திட்டத்திற்கு ஆண்டுதோறும், 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
துாய்மை பணியாளர்களின் குழந்தைகள் எந்த பள்ளியில் படித்தாலும், அவர்களுக்கு கட்டண சலுகை மட்டுமன்றி, விடுதி, புத்தக கட்டண உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக புதிய உயர் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்
நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத துாய்மை பணியாளர்களுக்கு, அடுத்த மூன்று ஆண்டுகளில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, வசிக்கும் இடத்திலேயே வீடு கட்டுதல் என, 30,000 குடியிருப்புகள் கட்டி தரப்படும்.
கிராமப் பகுதிகளில் வசிக்கும் துாய்மை பணியாளர்களுக்கு, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடு ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும்
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், பணியில் ஈடுபடும் துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு இலவசமாக வழங்கப்படும்.
இந்த ஆறு முக்கியமான அறிவிப்புகளை, துாய்மை பணியாளர்களின் நலனுக்காக, முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் முடி வெடுத்து அறிவித்துள்ளார்.
எனவே, துாய்மை பணியாளர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு, பணிகளுக்கு திரும்ப வேண்டும் என, அரசின் சார்பாக அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
மேலும்
-
மதுரை மாநகராட்சி மேயர் மாற்றத்தில் தடுமாற்றம்: உள்குத்து அரசியலால் தி.மு.க., தலைமை குழப்பம்
-
மகளை முன்னிறுத்தும் ராமதாஸ்: தீவிர அரசியலில் இறங்கிய மருமகள்
-
இனியும் தோல்வியை சந்திப்பார் பழனிசாமி: சாபம் விடுகிறார் பன்னீர்செல்வம்
-
ஈரோடு அருகே வாய்க்காலில் குளித்த கோவை கல்லுாரி மாணவர்கள் 2 பேர் பலி
-
அம்மன் கோவில் திருவிழா தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
-
'சிவில் சர்வீசஸ் மெயின்ஸ்' தேர்வு கையே