இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

டி.என்.பாளையம்:வாய்க்காலில் குளிக்க வந்த, கோவையை சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் இருவர் மூழ்கி பலியாகினர்.

கோவை, கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சிபிராஜ், 19, சக்தி நிகேஷன், 19, கோவை, பெரிய நாயக்கன்பாளையத்தை சேர்ந்த ரிஷிகுமார், 19, ஜெய்ஹரிஷ், 19, மற்றும் வினோத்குமார், 19, ஆகிய ஐந்து பேரும், கோவை தனியார் கல்லுாரி மாணவர்கள்.

ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் அருகே அரக்கன்கோட்டை வாய்க்காலில் குளித்தனர்.

வாணிப்புத்துாரில் தொட்டிபாலம் பகுதியில் வாய்க்காலில் மூன்று பேர் கரைக்கு வந்த நிலையில், சிபிராஜ், சக்தி நிகேஷன், ஆழமான பகுதியில் சிக்கினர்.

நீச்சல் தெரியாமல் இருவரும் மூழ்கினர். சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள், இருவரின் சடலங்களையும் மீட்டனர். பங்களாப்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement