ஈரோடு அருகே வாய்க்காலில் குளித்த கோவை கல்லுாரி மாணவர்கள் 2 பேர் பலி
டி.என்.பாளையம், ஆக. 15 ல் உள்ள வாய்க்காலில் குளிக்க வந்த, கோவையை சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் இருவர், தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.
கோவை, கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் மகன் சிபிராஜ், 19; அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் மகன் சக்தி நிகேஷன், 19; கோவை, பெரிய நாயக்கன்பாளையத்தை சேர்ந்த ரிஷிகுமார், 19, ஜெய்ஹரிஷ், 19, மற்றும் வினோத்குமார், 19; இவர்கள் ஐந்து பேரும், கோவை தனியார் கல்லுாரி, இரண்டாமாண்டு கம்ப்யூட்டர் அறிவியல் பிரிவு மாணவர்கள்.
ஐந்து பேரும் காரில், ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே அரக்கன்கோட்டை வாய்க்காலில் குளிக்க நேற்று வந்தனர். வாணிப்புத்துாரில் தொட்டிபாலம் பகுதியில் வாய்க்காலில் மதியம், ௧:௦௦ மணியளவில் குளித்தனர். மூன்று பேர் கரைக்கு வந்த நிலையில், சிபிராஜ் மற்றும் சக்தி நிகேஷன், ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளனர். அப்போது நீச்சல் தெரியாமல் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவர்கள் கூக்குரல் எழுப்பினர். அக்கம்பக்கத்தினர் சென்றும் மீட்க முடியாத நிலையில், பங்களாப்புதுார் போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. அவர்கள் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தந்தனர். அங்கு விரைந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு, இருவரின் சடலங்களையும் அடுத்தடுத்து மீட்டனர். குளிக்க வந்த இடத்தில், கல்லுாரி மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியானது, சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும்
-
சில மணி நேரத்தில் இனி 'செக்' பாஸ் ஆகும்! அக்., 4 முதல் புதிய நடைமுறை
-
சுதந்திர தின கொண்டாட்டத்தில் இந்திய 'கோ கோ' நட்சத்திரங்கள்... பிரதமர் மோடி உடன் பங்கேற்பு
-
தி.மு.க., - எம்.எல்.ஏ., அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.,வினர் கைது
-
இந்திராவை எதிர்த்ததால் ஆட்சியை இழந்த கருணாநிதி
-
எல்லா திட்டங்களையும் ஒரே நாளில் முடிக்க முடியாது
-
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கு எதிரான வழக்கு அபராதத்துடன் தள்ளுபடி