'சிவில் சர்வீசஸ் மெயின்ஸ்' தேர்வு கையே
சேலம், யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீசஸ் மெயின்ஸ் தேர்வின் அனைத்து கேள்விகளும், முதல்முறை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 2013 முதல், 2024 வரை வெளியிடப்பட்ட அனைத்து மெயின்ஸ் கேள்விகளையும், துல்லியமாக தமிழாக்கம் செய்து, தமிழ் மூலம் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு முதன்மையான ஆதார நுாலாக, கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமியால் வெளியிடப்பட்டது.
இதன் முதல் பிரதியை, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் முன்னிலையில், 'ஐ.ஏ.எஸ்., தேர்வில் தமிழால் வெல்வோம் -வினா தொகுப்பு' தலைப்பில் வெளியிடப்பட்டது. அதன் முக்கிய அம்சமாக, யு.பி.எஸ்.சி., மெயின்ஸ் முழு பாடத்திட்டம், 2013- முதல், 2024 கேள்விகளின் துல்லிய தமிழாக்கம், கிங் மேக்கர்ஸின் பிரத்யேக டெஸ்ட் சீரிஸ் கேள்விகள், எதிர்பார்க்கப்படும் முக்கிய கேள்விகள், 5,000க்கும் மேற்பட்ட மெயின் தேர்விற்கான கேள்விகள் என, மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பான விபரங்களுக்கு, 94442 27273 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும்
-
சில மணி நேரத்தில் இனி 'செக்' பாஸ் ஆகும்! அக்., 4 முதல் புதிய நடைமுறை
-
சுதந்திர தின கொண்டாட்டத்தில் இந்திய 'கோ கோ' நட்சத்திரங்கள்... பிரதமர் மோடி உடன் பங்கேற்பு
-
தி.மு.க., - எம்.எல்.ஏ., அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.,வினர் கைது
-
இந்திராவை எதிர்த்ததால் ஆட்சியை இழந்த கருணாநிதி
-
எல்லா திட்டங்களையும் ஒரே நாளில் முடிக்க முடியாது
-
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கு எதிரான வழக்கு அபராதத்துடன் தள்ளுபடி