அம்மன் கோவில் திருவிழா தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
இடைப்பாடி, இடைப்பாடியில் உள்ள மேட்டுத்தெரு, ஆலச்சம்பாளையம், வெள்ளாண்டிவலசு பகுதிகளில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. நேற்று தீ மிதி விழா நடந்தது.
அதில் பருவராஜகுல உறவினர் முறையாரின் மேட்டுமாரியம்மன் கோவிலில், பக்தர்கள் தீ மிதித்தனர்.
அலகு குத்தியும், எலுமிச்சை பழங்களை உடல் முழுதும் குத்தி வந்தும், பெண்கள் சிலர், குழந்தைகளுடன் வந்தும் தீ மிதித்தனர். 3 மணி நேரத்துக்கு மேல், ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேட்டுமாரியம்மன் சுவாமி, தங்க கவசத்தில் ஜொலித்தார். அதேபோல், க.புதுார் காளியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.
அதேபோல் ஆத்துார், கல்லாநத்தம் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, நேற்று தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சில மணி நேரத்தில் இனி 'செக்' பாஸ் ஆகும்! அக்., 4 முதல் புதிய நடைமுறை
-
சுதந்திர தின கொண்டாட்டத்தில் இந்திய 'கோ கோ' நட்சத்திரங்கள்... பிரதமர் மோடி உடன் பங்கேற்பு
-
தி.மு.க., - எம்.எல்.ஏ., அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.,வினர் கைது
-
இந்திராவை எதிர்த்ததால் ஆட்சியை இழந்த கருணாநிதி
-
எல்லா திட்டங்களையும் ஒரே நாளில் முடிக்க முடியாது
-
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கு எதிரான வழக்கு அபராதத்துடன் தள்ளுபடி
Advertisement
Advertisement