நாளை கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா

சேலம், இஸ்கான் சேலம் அமைப்பு சார்பில், சோனா கல்லுாரி மைதானத்தில், கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா, நாளை காலை, 6:00 முதல் இரவு, 9:00 மணி வரை நடக்க உள்ளது. தரிசனம், ஆரத்தி, யக்ஞம்,


கிருஷ்ண ஜென்ம லீலை, கோவர்த்தன லீலை நாடகம், இசைக்கச்சேரி, கிருஷ்ணர் வேடப்போட்டி, ஹரே கிருஷ்ண பஜனை, மகா அபிேஷகம், மஹா ஆரத்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. நிகழ்ச்சி முழுதும் பிரசாத விருந்தும் வழங்கப்படும். கருப்பூரில் உள்ள இஸ்கான் கோவிலில் கட்டுமானப்பணி நடந்து வருவதால், அங்கு நாளை தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சி எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement