இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயார்; சீனா விருப்பம்

பீஜிங்: கூடுதல் வரிகளை விதித்து உலக நாடுகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு, வரியை 50 சதவீதமாக அதிபர் டிரம்ப் உயர்த்தி உள்ளார். இந்த அமெரிக்காவின் முடிவு என்பது நியாயமற்றது எனக் கூறியுள்ள மத்திய அரசு, தேசிய நலனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவைப் போல பிற நாடுகளுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளதால், அதிபர் டிரம்ப்பின் இந்த முடிவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, இந்தியாவைப் போல ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் பொருட்களை வாங்கும் சீனாவுக்கும் அதிக வரிகளை விதிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின் ஜியன் கூறியதாவது; இந்தியாவும், சீனாவும் முக்கிய வளரும் நாடுகளாகும். இரு தரப்பும் ஒத்துழைக்கும் பட்சத்தில் இரு நாடுகளுக்கும் நன்மை கிடைக்கும். இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட பொது ஒப்பந்தங்களை செயல்படுத்த இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம்.
அரசியல் நம்பிக்கையை அதிகரிக்கவும், பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு போன்றவற்றில் ஒருங்கிணைந்து செயல்படுத்துதல் மூலமாக, இந்தியா - சீனா இடையிலான உறவுகளில் நல்ல வளர்ச்சியை அடைய முடியும், எனக் குறிப்பிட்டுள்ளார்.




மேலும்
-
சுதந்திர தின விழாவை புறக்கணித்த ராகுல்; பாகிஸ்தான் விரும்பி என பாஜ விமர்சனம்
-
பிரதமரின் அறிவிப்பு மகிழ்ச்சி: மனம் திறந்து பாராட்டிய திருமா!
-
இது சந்தோஷமான தருணம்: அப்துல் கலாம் விருது பெற்ற இஸ்ரோ தலைவர் நாராயணன் மகிழ்ச்சி
-
ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல்; நிறுத்தவில்லை என்கிறது இந்தியன் ஆயில்!
-
‛அபூர்வ ராகங்கள்' தந்த ‛அபூர்வ' மனிதர் ரஜினி: 50 ஆண்டுகளை கடந்தும் நிற்கும் அதிசய நாயகன்
-
பாஜவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி!