இது சந்தோஷமான தருணம்: அப்துல் கலாம் விருது பெற்ற இஸ்ரோ தலைவர் நாராயணன் மகிழ்ச்சி

சென்னை: இது சந்தோஷமான தருணம். ரொம்ப பெருமையா நினைக்கிறேன் என
அப்துல் கலாம் விருது பெற்ற இஸ்ரோ தலைவர் நாராயணன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
சுதந்திர தினத்தையொட்டி, இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார். இது குறித்து நிருபர்களிடம் நாராயணன் கூறியதாவது: இது ஒரு நல்ல சந்தோஷமான தருணம். நாம் ரொம்ப பெருமையாக நினைக்கிறேன்.
ஏனென்றால் அரசு பள்ளியில் படித்து, பர்தராக எம்.டெக், பிஎஸ்டி எல்லாம் ஐஐடி காரக்பூரில் படித்தேன். அங்கு சிறந்த மாணவர் விருது பெற்றேன். இந்த தருணத்தில் எனக்கு விருது வழங்கிய தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
அதேபோல் எனக்கு 41 ஆண்டுகள் கழித்து, இந்திய விண்வெளித்துறை செயலாளராக என்னை பணியில் அமர்த்திய பிரதமர் மோடிக்கும் எனது நன்றியை இந்த தருணத்தில் சொல்ல கடமைப்பட்டு உள்ளேன். இந்த விருது தனிப்பட்டது அல்ல. 20 ஆயிரம் இஸ்ரோ ஊழியர்களுக்கானது.
எனது பெற்றோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனது மனைவி, குழந்தைகள், எனது கிராமத்தினர் ஆதரவால் கிடைத்துள்ளது. ககன்யான் திட்டம் ரொம்ப நன்றாக போய் கொண்டு இருக்கிறது. இந்த ஆண்டு டிசம்பரில் முதல்வாரம் முதல் வெர்ஷன் போகும். 2035ம் ஆண்டு விண்வெளி நிலையம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும்
-
ஆஸியில் இந்திய சுதந்திர தினம் கொண்டாட்டம்: காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இடையூறு
-
உலகிற்கு அமைதியை கொண்டு வர பாடுபடும் இந்தியா: மோகன் பகவத்
-
வரதட்சணை புகார்களுக்கு ஆன்லைன் போர்ட்டல்: புதிதாய் யோசித்த கேரள அரசு
-
சர்வதேச பிரச்னைகளை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு; ரஷ்யா பாராட்டு
-
சுதந்திர தின விழாவை புறக்கணித்த ராகுல்; பாகிஸ்தான் விரும்பி என பாஜ விமர்சனம்
-
பிரதமரின் அறிவிப்பு மகிழ்ச்சி: மனம் திறந்து பாராட்டிய திருமா!