சுதந்திர தின விழாவை புறக்கணித்த ராகுல்; பாகிஸ்தான் விரும்பி என பாஜ விமர்சனம்

20

புதுடில்லி: டில்லியில் மத்திய அரசின் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்காத லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை பாஜ கடுமையாக விமர்சித்துள்ளது.

நாட்டின் 79வது சுதந்திர தினத்தையொட்டி, டில்லி செங்கோட்டையில், ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் பிரதமர் தேசியக்கொடி ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஆனால், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மற்றும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் பங்கேற்கவில்லை. இது தற்போது சர்ச்சையாகியுள்ளது.

சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்த தியாகிகளின் வீரத்தை போற்றும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை காங்கிரஸ் தலைவர்கள் புறக்கணித்திருப்பதை பாஜவினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இது குறித்து பாஜ செய்தித்தொடர்பாளர் ஷெஷாத் பூனவாலா வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், "ஒட்டுமொத்த நாட்டின் கொண்டாட்டத்தை பாகிஸ்தான் விரும்பி ராகுல் புறக்கணித்திருப்பது வருத்தமானது. இது மோசமான நடத்தை. இதுதான் இந்திய அரசியலமைப்புக்கும், ராணுவத்திற்கும் கொடுக்கும் மரியாதையா?" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே டில்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி சார்பில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் ராகுலும், மல்லிகார்ஜூன கார்கேவும் கொட்டும் மழையிலும் பங்கேற்றிருந்தனர்.

Advertisement