நடுவானில் ஏர் ஏசியா விமானத்தில் கோளாறு; அவசரமாக சென்னையில் தரையிறக்கம்

சென்னை: மலேசியாவில் இருந்து கோழிக்கோடு நோக்கி சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 158 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் ஏர் ஏசியா விமானம் ஒன்று, கோழிக்கோடு நோக்கி புறப்பட்டது. நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சென்னை வான்வெளியில் விமானம் பறந்த போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி அறிந்தார்.
உடனடியாக சென்னை விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்ட அவர், அவசரமாக விமானத்தை தரையிறக்க அனுமதி கோரினார். அவர்களும் அனுமதி கொடுத்த நிலையில், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், விமானப் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தொடர்ந்து, அவர்கள் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
பிறகு, விமானத்தில் கோளாறு சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. தொழில்நுட்ப பிரச்னை சரி செய்யப்பட்ட பிறகு, மீண்டும் இன்று மாலை விமானம் கோழிக்கோடு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
சுதந்திர தின விழாவை புறக்கணித்த ராகுல்; பாகிஸ்தான் விரும்பி என பாஜ விமர்சனம்
-
பிரதமரின் அறிவிப்பு மகிழ்ச்சி: மனம் திறந்து பாராட்டிய திருமா!
-
இது சந்தோஷமான தருணம்: அப்துல் கலாம் விருது பெற்ற இஸ்ரோ தலைவர் நாராயணன் மகிழ்ச்சி
-
ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல்; நிறுத்தவில்லை என்கிறது இந்தியன் ஆயில்!
-
‛அபூர்வ ராகங்கள்' தந்த ‛அபூர்வ' மனிதர் ரஜினி: 50 ஆண்டுகளை கடந்தும் நிற்கும் அதிசய நாயகன்
-
பாஜவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி!