உழைக்கும் மக்களுக்கு துணை நிற்போம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: உழைக்கும் மக்களுக்கு துணையாக நிற்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தனியார் மயம் செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி அலுவலகமாக ரிப்பன் மாளிகை முன் துாய்மைப்பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் அமைச்சர்கள், மேயர் பல முறை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
தொடர்ந்து 13 நாட்களாக போராட்டம் நடத்திய அவர்களை, உயர்நீதிமன்ற உத்தரவுபடி போலீசார் அங்கிருந்து அகற்றினர். கைது செய்யப்பட்டு மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். அரசின் இந்த நடவடிக்கை பல்வேறு தரப்பினர் மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, திமுகவின் கூட்டணி கட்சியினரும் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்நிலையில், துாய்மைப்பணியாளர்களுக்கு வீடு கட்டித்தருவது, பணியின்போது உயிரிழப்போருக்கு நிவாரணம் உள்ளிட்ட 6 அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.
சென்னையில் தூய்மைப் பணியாளர் சங்கத்தினர் முதல்வர் ஸ்டாலினை இன்று (ஆகஸ்ட் 15) நேரில் சந்தித்து பேசினர். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூய்மைப் பணியாளர்களின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளைச் சந்தித்தேன்.
நேற்று நமது அரசு வெளியிட்ட அறிவிப்புகளுக்கு மகிழ்ச்சி தெரிவித்து, மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவற்றையும் பரிசீலித்து நிறைவேற்றிக் கொடுப்போம். என்றைக்கும் நாம் உழைக்கும் மக்களுக்குத் துணையாக நிற்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.












மேலும்
-
சுதந்திர தின விழாவை புறக்கணித்த ராகுல்; பாகிஸ்தான் விரும்பி என பாஜ விமர்சனம்
-
பிரதமரின் அறிவிப்பு மகிழ்ச்சி: மனம் திறந்து பாராட்டிய திருமா!
-
இது சந்தோஷமான தருணம்: அப்துல் கலாம் விருது பெற்ற இஸ்ரோ தலைவர் நாராயணன் மகிழ்ச்சி
-
ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல்; நிறுத்தவில்லை என்கிறது இந்தியன் ஆயில்!
-
‛அபூர்வ ராகங்கள்' தந்த ‛அபூர்வ' மனிதர் ரஜினி: 50 ஆண்டுகளை கடந்தும் நிற்கும் அதிசய நாயகன்
-
பாஜவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி!