நெல்லை பாலுவிற்கு சிறந்த சமூக சேவகருக்கான விருது

மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவின் சமூகப் பணியினை பாராட்டி மதுரையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மதுரை கலெக்டர் பிரவீன் குமார் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
மதுரையின் அட்சய பாத்திரம்
கொரோனா இரண்டாவது அலையின் போது தொடங்கப் பெற்று மதுரையில் ரோட்டோரத்தில் உள்ள வரியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பசியால் தவிப்போருக்கு தினமும் 300 பேருக்கு மதிய உணவினை மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு கடந்த 1600 நாட்களாக வழங்கி வருகிறார்.
இந்திய அரசின் 79வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் இன்று நடைபெற்றது மதுரையில் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் ஐஏஎஸ் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி பல துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு சிறப்பு விருதினை வழங்கினார்
சேவை விருது
விழாவில் ,கடந்த 1560 நாட்களுக்கு மேலாக மதுரையில் தெருவோரத்தில் வாழும் வரியவர்களுக்கு தினமும் 300 பேருக்கு மதிய உணவினை வழங்கி வரும் மதுரையின் அட்சயபாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவின் சமூகப் பணியினை பாராட்டி விருதுக்கான கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
நிகழ்வில் போலீஸ் தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், மதுரை டி.ஐ.ஜி அபிநவ் குமார்,எஸ்பி அரவிந்த்,டிஆர்ஓ. அன்பழகன் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சாலி தளபதி உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
சுதந்திர தின விழாவை புறக்கணித்த ராகுல்; பாகிஸ்தான் விரும்பி என பாஜ விமர்சனம்
-
பிரதமரின் அறிவிப்பு மகிழ்ச்சி: மனம் திறந்து பாராட்டிய திருமா!
-
இது சந்தோஷமான தருணம்: அப்துல் கலாம் விருது பெற்ற இஸ்ரோ தலைவர் நாராயணன் மகிழ்ச்சி
-
ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல்; நிறுத்தவில்லை என்கிறது இந்தியன் ஆயில்!
-
‛அபூர்வ ராகங்கள்' தந்த ‛அபூர்வ' மனிதர் ரஜினி: 50 ஆண்டுகளை கடந்தும் நிற்கும் அதிசய நாயகன்
-
பாஜவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி!