ஆஸியில் இந்திய சுதந்திர தினம் கொண்டாட்டம்: காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இடையூறு

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இடையூறு செய்தது பெரும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது.



இந்தியாவின் 79வது சுதந்திர தினம், பெரும் உவகையுடனும் உற்சாகத்துடனும் இன்று கொண்டாட்டப்பட்டது. தலைநகர் புதுடில்லியில் மூவர்ணக்கொடியை ஏற்றி பிரதமர் மோடி முக்கிய உரையாற்றினார்.


டில்லியில் மட்டுமல்லாது இந்தியாவை கடந்து பல்வேறு நாடுகளிலும் சுதந்திர தின விழா முன் எப்போதும் இல்லாத வேட்கையுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது.


ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது மெல்போர்ன் துணை தூதரகம் வெளியே காலிஸ்தான் பிரிவினைவாதிகள் குழுவினர் காலிஸ்தான் ஆதரவு கொடியை அசைத்துள்ளனர். தகவல் அறிந்த அதிகாரிகள், அங்கு சென்று நிலைமைய சீராக்கினர்.


ஆஸ்திரேலியா முழுவதும் காலிஸ்தான் ஆதரவு நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. மெல்போர்னில் சுவாமி நாராயண் கோவில், சில உணவகங்கள் அண்மையில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

Advertisement