உலகிற்கு அமைதியை கொண்டு வர பாடுபடும் இந்தியா: மோகன் பகவத்

புவனேஸ்வர்: '' உலகிற்கு அமைதி மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வரவும், தர்மத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இந்தியா பாடுபடுகிறது,'' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியா தனித்துவமிக்க நாடு. உலகிற்கு அமைதி மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வரவும், தர்மத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் பாடுபடுகிறது. நம் நாட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி. தைரியம், பாதுகாப்பு, அமைதி மற்றும் மரியாதை கிடைக்கச் செய்வதற்கே நாம் சுதந்திரம் பெற்றோம். இன்று உலகம் தடுமாறி வருகிறது. கடந்த 2000 ஆண்டுகளில் பல சோதனைகள் இருந்த போதும், பிரச்னைகளுக்கு இன்னும் தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை.
உலகிற்கு ஒரு தீர்வை வழங்குவதும், மதக் கொள்கை அடப்படையில் வேரூன்றிய நமது தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் மகிழ்ச்சி மற்றும் அமைதியால் நிரப்பப்பட்ட ஒரு புதிய உலகத்தை உருவாக்குவதும் நமது கடமை. இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.



மேலும்
-
நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகமே: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
ஹூமாயூன் கல்லறை குவிமாடம் சரிந்தது: இடிபாடுகளில் சிக்கிய 10 பேரை மீட்கும் பணி தீவிரம்
-
ஐகோர்ட்டை விட சுப்ரீம் கோர்ட் மேலானது அல்ல: தலைமை நீதிபதி கவாய்
-
டிசம்பரில் இந்தியா வருகிறார் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெஸ்ஸி: பிரதமர் மோடியையும் சந்திக்கிறார்
-
சத்தீஸ்கரில் சோகம்; கார்-லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலி; ஒருவர் படுகாயம்
-
பெங்களூருவில் வீட்டில் கேட்ட பலத்த வெடிச்சத்தம்: 8 வயது சிறுவன் பலி, நேரில் சென்ற சித்தராமையா